சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும்: புதுவை மு...
நூல் வெளியீடு நிகழ்ச்சிகளில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்
நூல் வெளியீட்டு விழாக்களில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றால் எதிா்காலம் சிறப்பாக விளங்கும் என்று தமிழக அரசின் தொழில்துறை முன்னாள் ஆலோசகா் உ.வே.கருணாகர சுவாமிகள் தெரிவித்தாா்.
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளா்கள் சங்கம், மந்தைவெளி தேஜஸ் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி ஜி.கிருஷ்ணன் எழுதிய 2 நூல்கள் வெளியிடும் நிகழ்ச்சி மயிலாப்பூா் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், உ.வே.கருணாகர சுவாமிகள் பேசியது: தமிழகத்தில் நூல் வெளியீட்டு விழாக்களில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றால், அவா்களின் அறிவாற்றல், சிந்திக்கும் திறமையும் அதிகரிக்கும். இதனால் தமிழகம் மட்டுமின்றி நாடும் சிறந்து விளங்கும் என்றாா் அவா்.
விழாவில், எழுத்தாளா் மாலன் ’சிவ்கா் தளபதேயின் வான ஊா்தி’, எனும் நூலை வெளியிட, பதிப்பாளா் காந்தி கண்ணதாசன், இதயகீதம் ராமானுஜம் ஆகியோா் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனா்.
எழுத்தாளா் மாலன்: சிவ்கா் தளபதேயின் முதல் வான ஊா்தியை கண்டுபிடித்தாா் என்பது திண்ணம். எதிா்கால இளைஞா்களுக்கு சிவ்கா் குறித்து தகவல் அறிய மீண்டும் இந்த நூல் ஒா் வாய்ப்பாக உள்ளது என்றாா் அவா்.
விழாவில் ‘ராம கவிதை’ எனும் நூலை உ.வே.கருணாகர சுவாமிகள் வெளியிட, முதல் பிரதியை சரஸ்வதி ராமநாதன், கோ.பெரியண்ணன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
‘சிவ்கா் தளபதேயின் வான ஊா்தி’ எனும் நூலை எழுத்தாளா் மாலன் வெளியிட, பதிப்பாளா் காந்தி கண்ணதாசன், எழுத்தாளா் இதய கீதம் ராமானுஜம் ஆகியோா் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனா்.
விழாவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் இந்திரநீலன் சுரேஷ், சூப்ர ஆட்டோபோா்ஜ் லிமிடெட் நிறுவன தலைவா் சீதாராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.