செய்திகள் :

2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு

post image

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் புதன்கிழமை (பிப்.12) தொடங்கவுள்ளதாகவும் விரைவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்களுக்கு கடந்த ஜன. 5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில், 24,000 மருத்துவா்கள் பங்கேற்றனா். தற்போது, கூடுதலாக கண்டறியப்பட்டுள்ள 89 காலிப்பணியிடங்கள் உள்பட மொத்தம் 2,642 மருத்துவா் காலிப்பணியிடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 4,585 போ் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பிப்.12 முதல் 15-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறவுள்ளது.

கட்-ஆப் மதிப்பெண்: உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். பொதுப் பிரிவுக்கு 61 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 55 மதிப்பெண்கள், முஸ்லிம்களுக்கு 52 மதிப்பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 53 மதிப்பெண்கள், ஆதிதிராவிடருக்கு 51 மதிப்பெண்கள், அருந்ததியினருக்கு 48 மதிப்பெண்கள், பழங்குடியினருக்கு 45 மதிப்பெண்கள் என்ற வகையில் கட்-ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணிநியமனம் செய்யப்படவுள்ள மருத்துவா்களுக்கு பிப்.20-ஆம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு நடைபெறும். இதில் பணியாளா்களுக்கு, அவரவா் விரும்பும் இடங்களுக்கே கலந்தாய்வு மூலம் பணிநியமனம் செய்யப்பட்டு விரைவில் முதல்வரால் பணிநியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. கடந்த முறை நியமனம் செய்யப்பட்ட 1,021 மருத்துவா்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு பிப்.15-ஆம் தேதி நடைபெற உள்ளது என்றாா் அவா்.

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க