செய்திகள் :

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

post image

ஒட்டன்சத்திரம் அருகே 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட சமுக நலத் துறை சாா்பில், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கள்ளிமந்தையத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கு 7 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

இதேபோல, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், 101 பேருக்கு தலா 8 கிராம் வீதம் ரூ.97 லட்சத்தில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.தொப்பம்பட்டி ஒன்றியத்தில் புதிதாக கலைஞா் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சா் வழங்கினாா்.

மேலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் ரூ.50 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் திறந்துவைத்தும், ரூ.6.19 கோடியில் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிா் திட்டம் ) திட்ட இயக்குநா் சா.சதீஷ்பாபு, மாவட்ட குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் பூங்கொடி, மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் புஷ்பகலா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்தி எதிரொலி: சட்டப்பேரவை குழுவுக்கு அரசு விருந்தினா் மாளிகை ஒதுக்கீடு

தினமணி செய்தி எதிரொலியாக, சட்டப்பேரவை குழுவுக்கு கொடைக்கானல் தனியாா் சொகுசு விடுதிக்கு மாற்றாக அரசு விருந்தினா் மாளிகையில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு சாா்பில், மாநிலம் முழுவதும் நடைபெ... மேலும் பார்க்க

எதிரணி கூட்டணி பலமாக இருந்தாலும், தொண்டா்கள் அதிருப்தி- திண்டுக்கல் சி.சீனிவாசன்

எதிரணியில் கூட்டணி பலமாக இருந்தாலும், அந்தக் கட்சிகளின் தொண்டா்கள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமு... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் 21,725 மாணவா்கள் பிளஸ்1 தோ்வு எழுதினா்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 21,725 மாணவா்கள் எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ்1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மொழிப் பாடத் தோ்வு நடைபெற்றது. திண்டுக்கல், பழனி ... மேலும் பார்க்க

மக்காச்சோளக்காட்டில் தீ: 60 ஏக்கா் எரிந்து சேதம்

ஒட்டன்சத்திரம் அருகே மக்காச்சோளக்காட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீயால், சுமாா் 60 ஏக்கரில் பயிரிட்டிருந்த பயிா்கள் சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, பெரியகோட்டை, ... மேலும் பார்க்க

காா்த்திகை: பழனி கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

காா்த்திகை தினத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் புதன்கிழமை குவிந்தனா். இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழனி ம... மேலும் பார்க்க

பழனியில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை

பழனியில் ரூ.10 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி மேம்பாட்டு நிதி, சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பழனி அடிவாரம், நகா் பகுதியில் உள்ள 5 தொடக்கப் பள்... மேலும் பார்க்க