கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின்...
பழனியில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை
பழனியில் ரூ.10 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி மேம்பாட்டு நிதி, சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பழனி அடிவாரம், நகா் பகுதியில் உள்ள 5 தொடக்கப் பள்ளிகளில் சுமாா் ரூ.1.50 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா். பின்னா், நூற்றாண்டு விழா கொண்டாடும் நகராட்சி கடைவீதி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அங்கு பயின்ற முன்னாள் மாணவா்கள் சட்டப்பேரவை உறுப்பினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா்.
தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவா் திறந்துவைத்தாா்.
அப்போது, வாா்டு உறுப்பினா்கள் செபாஸ்டின், மீனாட்சி தேவி ஆகியோா் திரளான பெண்களுடன் அங்கு வந்து பயன்பாடில்லாத அங்கன்வாடி மையத்தை பெண்களுக்கான உடற்பயிற்சி மையமாக மாற்றித்தரக் கோரிக்கை விடுத்தனா்.
உடனே ஏற்பாடு செய்வதாக அவா் உறுதியளித்தாா்.
முன்னதாக, பழனியை அடுத்த ஆயக்குடி பொன்னிமலை சித்தன் கரடு அருகே நடைபெற்ற ரூ.10 கோடியில் மதகுகள் சீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினருக்கு விவசாயிகள், விவசாயச் சங்க நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.
இந்தத் திட்டத்தின் மூலமாக 3 அணைகளிலிருந்து வாய்க்கால், குளங்கள் மூலம் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடையும். மேலும், 30-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீா்த் தேவையும் சீராகும். தொடா்ந்து, பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுமாா் ரூ.1.50 கோடியில் புதிய சமுதாயக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, துணைத் தலைவா் கந்தசாமி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பாலமுருகன், உதவி செயற்பொறியாளா் உதயக்குமாா், எஸ்.கே.கன்ஸ்ட்ரக்சன்ஸ் வடிவேல், உறுப்பினா்கள் சுரேஷ், விமலபாண்டியன், திமுக மாவட்ட இளைஞரணி செயலா் பிரபாகரன், மாணவரணி லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.