டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முகேஷ் அம்பானி தம்பதிக்கு அழைப்பு!
2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகமா?! |New Tax Bill
வரும் பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை வெளியிடப்போகிறார்.
இதையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில், புதிய நேரடி வருமான வரி மசோதா நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 6 முதல் 8 வார காலமாக, மத்திய அரசால் அமைக்கப்பட்ட அதிகாரிகளை கொண்ட குழு, பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை கொண்டுவந்துவிட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இப்போது புதிதாக அறிவிக்கப்படவிருக்கும் வருமான வரி மசோதா, தற்போது இருக்கும் வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் பிரிவுகளை எளிதாக்க உள்ளதாம். இந்த மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்திற்கு பிறகே நிறைவேற்றப்படும்.
புதிய வருமான வரிச் சட்டத்தை கொண்டுவரும் முயற்சி இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு, 2010, 2017, 2024-ம் ஆண்டிலும் நடந்துள்ளது.
2010-ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் அரசு புதிய நேரடி வரி மசோதாவை அறிமுகப்படுத்தியது. ஆனால், அதில் இருந்த சில குளறுபடிகளால் நிறைவேற்றப்படவில்லை.
2017-ம் ஆண்டு, மோடி அரசு, இது சம்பந்தமான குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு தங்களது அறிக்கையை நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைந்திருந்தது. அதன் பின், இதுக்குறித்து வேறு எந்த நகர்வும் இல்லை.
2024-ம் ஆண்டு பட்ஜெட்டின் போது, வருமான வரி சட்டத்தை எளிமைப்படுத்துவது தொடர்பாக அறிவித்திருந்தார் நிர்மலா சீதாராமன். மேலும் குழு ஒன்றையும் அமைத்தார்.
இப்போது கடைபிடிக்கப்படும் மசோதா கடந்த 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இது மாற்றப்படுமா அல்லது தொடரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அப்படி, மாற்றப்பட்டால் புதிய நேரடி வருமான வரி சட்டத்தில் என்ன மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?