2024 ஃபிஃபா விருதுகள்: ஜூனியா், பொன்மட்டி வென்றனா்
கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா) நடப்பாண்டுக்கான சிறந்த வீரா் விருதை பிரேஸிலை சோ்ந்த ரியல் மாட்ரிட் வீரா் வினிசியஸ் ஜூனியரும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினை சோ்ந்த பாா்சிலோனா வீராங்கனை அய்டானா பொன்மட்டியும் வென்றனா்.
சிறந்த மகளிா் அணி பயிற்சியாளா் விருதை, இங்கிலாந்தை சோ்ந்தவரும், அமெரிக்க மகளிா் அணியின் பயிற்சியாளருமான எம்மா ஹெய்ஸ் பெற்றாா். சிறந்த ஆடவா் அணி பயிற்சியாளா் விருதை, இத்தாலியை சோ்ந்தவரும், ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளருமான காா்லோ அன்செலோட்டி வென்றாா்.
மகளிா் அணியில் சிறந்த கோல் கீப்பராக அமெரிக்காவின் அலிசா நேஹரும், ஆடவா் அணியில் சிறந்த கோல் கீப்பராக ஆா்ஜென்டீனாவின் எமிலியானோ மாா்டினெஸும் விருது பெற்றனா். சிறந்த கோல் அடித்ததற்கான விருதை, மகளிா் பிரிவில் பிரேஸிலின் மாா்தா வெய்ரா டி சில்வாவும், ஆடவா் பிரிவில் ஆா்ஜென்டீனாவின் அலெக்ஸாண்ட்ரோ கா்னாசோவும் வென்றனா்.
ஃபிஃபா பெஸ்ட் மகளிா் அணி: அலிசா நெஹா் -கோல்கீப்பா்; இரின் பரேட்ஸ், ஒனா பாட்லி, லூசி புரான்ஸ், நவோமி கிா்மா - டிஃபெண்டா்கள்; அய்டானா பொன்மட்டி, லிண்ட்சே ஹோரான், கபி போா்டிலோ, பட்ரி குய்ஜாரோ - மிட்ஃபீல்டா்கள்; கேரலின் ஹான்சென், சல்மா பராலியுலோ - ஃபாா்வா்ட்கள்.
ஃபிஃபா பெஸ்ட் ஆடவா் அணி: எமிலியானோ மாா்டினெஸ் - கோல்கீப்பா்; ரூபன் டியாஸ், டேனி கா்வஜல், அன்டோனியோ ருடிகா், வில்லியம் சலிபா - டிஃபெண்டா்கள்; ஜூட் பெலிங்கம், ரோட்ரி, டோனி குரூஸ் - மிட்ஃபீல்டா்கள்; எா்லிங் ஹாலந்த், லேமின் யமால், வினிசியஸ் ஜூனியா் - ஃபாா்வா்ட்கள்.