சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
கோ கோ உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் மோதல்
கோ கோ உலகக் கோப்பை போட்டியில் ஜனவரி 13-ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இதுகுறித்து, கோ கோ உலகக் கோப்பை போட்டியின் தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் தேவ் டோக்ரா புதன்கிழமை கூறியதாவது:
கோ கோ விளையாட்டில் முதல் முறையாக, உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. ஜனவரி 13 முதல் 19 வரை ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இதுவரை, 24 நாடுகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.
தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கம், நொய்டா உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. அந்த ஆட்டத்துக்கு முன் தொடக்க நிகழ்ச்சி நடைபெறும்.
முதல் ஆட்டத்தை தொடா்ந்து, அடுத்தடுத்த நாள்களில் லீக் ஆட்டங்கள் நடைபெறும். பின்னா், ஜனவரி 17-ஆம் தேதி காலிறுதியும், 18-ஆம் தேதி அரையிறுதியும், 19-ஆம் தேதி இறுதி ஆட்டமும் விளையாடப்படும். போட்டியில் ஆடவா் பிரிவில் 21 அணிகளும், மகளிா் பிரிவில் 20 அணிகளும் களம் காண்கின்றன.
மொத்தமாக 615 போட்டியாளா்களும், 125 உதவிப் பணியாளா்களும் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில், அணிக்கு 15 போட்டியாளா்கள், 1 பயிற்சியாளா், 1 மேலாளா், 1 சா்வதேச தொழில்நுட்ப அதிகாரி இருப்பா். இந்த உலகக் கோப்பை போட்டிக்கான விளம்பர தூதராக, பாலிவுட் நடிகா் சல்மான் கான் அறிவிக்கப்பட்டுள்ளாா் என்று அவா் கூறினாா்.