செய்திகள் :

2025 - 26 ல் நாட்டின் பணவீக்கம் 4.3% - 4.7% ஆக இருக்கும்: தகவல்

post image

2025 - 26 நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் சராசரியாக 4.3 - 4.7% ஆக நிலைப்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கிப் பங்கு முதலீட்டு நிபுணர்களைக் கொண்ட பி.எல். கேப்பிடல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உணவுப் பொருள்களின் விலை சீராகவும் விவசாய உற்பத்தி நிலையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எல். கேப்பிடல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உணவு பணவீக்கம் காரணமாக 2024-ஆம் ஆண்டில் உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் அதிகமாக இருந்தது. ஆனால், 2025-ல் உணவுப் பொருள்களின் விலையை சீராக்க விவசாய உற்பத்தி, ராபி பயிர் உற்பத்தி ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும்.

2024-ல் பணவீக்கம் அதிகரித்ததற்கு காலநிலை மாற்றம், வெப்ப அலை, கடுமையான மழைப்பொழிவு, விவசாய விளைச்சல் பாதிப்பு ஆகியவை விலை ஏற்றத்துக்கு காரணங்களாக அமைந்தன.

நாட்டின் பணவீக்கத்தை 2 - 6 சதவீதத்தில் இருக்குமாறு கவனித்துக்கொள்ள ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடும் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு! ரூ. 86.31

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 13) ஒரே நாளில் 27 காசுகள் சரிந்து ரூ. 86. 31 காசுகளாக வணிகமாகிறது. மேலும் பார்க்க

பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்! சென்செக்ஸ், நிஃப்டி 0.9% சரிவு!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (ஜன. 13 )இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 705 புள்ளிகள் சரிவுடனனும் நிஃப்டி 23 ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது. மேலும் பார்க்க

நிலக்கரி இறக்குமதி 2 சதவிகிதம் அதிகரிப்பு!

புதுதில்லி: நடப்பு நிதியாண்டு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி 2 சதவிகிதம் அதிகரித்து 1,82.02 கோடி டன்னாக உள்ளது.பிசினஸ்-டு-பிசினஸ் இ-காமர்ஸ் நிறுவனமான எம்ஜங்ஷன்... மேலும் பார்க்க

வலுவான காலாண்டு முடிவுகளால் டிசிஎஸ் 4% உயர்வு!

மும்பை: இந்திய பங்குச் சந்தை கலைவையான பொக்கில் இன்று தொடங்கிய வேளையிலும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வலுவான காலாண்டு முடிவுகள் வெளியான நிலையில் அதன் பங்குகள் 3.7 சதவிகிதம் வரை உயர்ந்து ர... மேலும் பார்க்க

அதானி வில்மர் பங்கு 10% சரிவு!

புதுதில்லி: அதானி குழுமமானது, அதானி வில்மர் நிறுவனத்தில் உள்ள 20 சதவிகித பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.7,148 கோடியை வெளிச்சந்தையில் திரட்டும் என்ற செய்தியைத் தொடர்ந்து, வில்மரின் பங்குகள் சுமார் ... மேலும் பார்க்க

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி!

மும்பை: வலுவான டாலரின் அழுத்தம் மற்றும் வெளிநாட்டு நிதி ஆகியவை தொடர்ந்து வெளியேறி வருவதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாறு காணாத வகையில், 14 காசுகள் சரிந்து ரூ.86 ஆக முடிந்தது.டாலருக்... மேலும் பார்க்க