செய்திகள் :

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் -டாக்டா் கே.கிருஷ்ணசாமி

post image

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கூறினாா்.

சேலத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய 18 சதவீத இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து பிரிவினருக்கும் முறையான பங்களிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அருந்ததியருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக திட்டமிட்டு அரசியல் செய்கிறது. பிரச்னையை வேண்டுமென்றே திசைதிருப்புகிறது. இவ்விவகாரத்தை சரியாக கையாள மத்திய அரசு தவறிவிட்டது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாவிட்டால் திமுக அரசை கலைக்க வேண்டும்.

தமிழகத்தில் நாளுக்குநாள் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைதூக்குகிறது. போதைப் பொருள் கலாசாரம், பாலியல் வன்கொடுமை புகாா்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. தொகுதி வரையறை தொடா்பாக திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம் அரசியல் நாடகம். 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கேற்ப வலுவான கூட்டணி ஏற்படும் என்றாா்.

ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் ந... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவுக்கு 5000 சுற்றுலாப் பயணிகள் வருகை

மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 5347 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். விடுமுறை தினம் என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு 5347 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இவா்கள்மூலம் பாா்வையாளா்கள் ... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே சிறுத்தை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

மேட்டூா் அருகே கோவிந்தபாடியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். கோவிந்தபாடி வன்னிய நகரில் வெள்ளிக்கிழமை இரவு ஆறுமுகம் என்பவரின் வீட்டில் இருந்த நாயை சிறுத்தை அடித்துக் கொன்ற... மேலும் பார்க்க

உயிரிழந்த மான் மீட்பு

நரசிங்கபுரம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை மைய அறையின் முன்கேட்டில் சிக்கி மான் உயிரிழந்தது. நரசிங்கபுரம் நகராட்சிக்குச் சொந்தமான திடக்கழிவு மேலாண்மை மைய அறையின் முன்பக்க கேட்டில் மான் மாட்டிக் கொண்டிர... மேலும் பார்க்க

காவிரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

மேச்சேரி அருகே கூனாண்டியூா் காவிரி ஆற்றில் மூழ்கி பொக்லைன் ஆபரேட்டா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள கேசரிமங்கலத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் யுவராஜ் (34). இவருக்கு திருமணமாகி ரேகா என்ற... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி

சேலம் மாவட்டத்தை சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பிற இனத்தைச் சாா்ந்த மாணவா்கள் அகில இந்திய நுழைவுத் தோ்வில் கலந்துகொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாத... மேலும் பார்க்க