செய்திகள் :

2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு! - நீதிமன்றத்தில் தகவல்

post image

வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்பட்ட பகுதியில் புது மண்டபத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டு பூட்டப்பட்டது.

இந்த புது மண்டபத்தைத் புதுப்பித்து மக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் முன்பு இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கோயில் நிர்வாகத் தரப்பு வழக்கறிஞர், "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு 2026 ஜனவரி மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக புது மண்டபம் புதுப்பிப்பு பணிகள் முடிந்துவிடும். எனவே அதுவரை கால அவகாசம் தர வேண்டும்" என்று கூறினார்.

டிசம்பர் மாதம் இறுதிக்குள் புது மண்டபம் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துவிடுமா? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Madurai Meenakshi Amman Temple Kumbhabhishekham in January 2026

என்னைப் பார்க்கவே தயங்குவார் பழனிசாமி; அவரை முதல்வராக்கியது நாங்கள்! - டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே நாங்கள்தான் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த... மேலும் பார்க்க

நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

திமுக, அதிமுகவின் கொள்கைத் தலைவர்களை ஒன்றாகக் கொண்டு வந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் மீது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.தவெக கூட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு!

குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், வணிக வ... மேலும் பார்க்க

சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை மட்டும்தான்: அண்ணாமலை விமர்சனம்

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை திமுக அரசு கைவிடப்போவதாகத் தெரிவித்த முடிவை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.சட்டப்பேரவையில் வெளியிட்ட திட்டங்களில் 256 திட்டங்களைக் கைவிடப்போவதாக திமுக ... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை, புறநகரில் இரவில் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வானிலை நிலவரங்களை அவ்வ... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப். 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்... மேலும் பார்க்க