செய்திகள் :

25 ஆண்டுகளுக்குப் பிறகு கிளப் அணியிலிருந்து விலகும் வரலாற்று நாயகன்!

post image

பிரபல கால்பந்து வீரர் தாமஸ் முல்லர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மன் கிளப்பை விட்டுப் பிரிகிறார்.

ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக 25 ஆண்டுகளாக விளையாடிவரும் தாமஸ் முல்லர் இந்த சீசனோடு அணியை விட்டு பிரிகிறார்.

பெயர்ன் மியூனிக் அணிக்காக 743 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த அணிக்காக ஒருவர் அதிகமான போட்டிகளில் விளையாடியதில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

கடந்த 2,000ஆம் ஆண்டில் இந்த அணியில் சேர்ந்த தாமஸ் முல்லர் அட்டாகிங் மிட்ஃபீல்டர், செகண்ட் ஸ்டிரைக்கராக விளையாடி வந்தார்.

12 முறை புன்டெஸ்லீகா தொடரினையும் 2 முறை சாம்பியன்ஸ் லீக்கையும் 6 டிஎஃப்எக்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார்.

தொடர்ச்சியாக 11 முறை புன்டெஸ்லீகா தொடரினை வென்றதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

பெயர்ன் மியூனிக் அணிக்காக 3-ஆவதாக அதிக கோல்கள் (247) அடித்துள்ளார். முதலிரண்டு இடங்களில் ஜெரால்ட் முல்லர் (565), லெவண்டாவ்ஸ்கி (344) இருக்கிறார்கள்.

சர்வதேச போட்டிகளில் 2024இல் ஓய்வை அறிவித்த தாமஸ் முல்லர் இந்த சீசனோடு பெயர் மியூனிக் கிளப் அணியில் இருந்தும் விலகுகிறார்.

ஜூன் 30 உடன் அவரது ஒப்பந்தம் முடிவடைகிறது. கிளப் உலகக் கோப்பை ஜூன் 14ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

சண்முக பாண்டியனின் கொம்புசீவி கிளிம்ஸ்!

நடிகர் சண்முக பாண்டியனின் பிறந்த நாளில் கொம்புவீசி படத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர்.மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் கொம்புவீசி என்கிற பட... மேலும் பார்க்க

தன் மீதான வன்முறை வழக்கை ரத்த செய்யக்கோரி ஹன்சிகா மனு!

நடிகை ஹன்சிகா குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை 2022-ல்ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.ஹன்சிகாவின் திருமண... மேலும் பார்க்க

100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்த கோட் பட பாடல்!

விஜய், த்ரிஷா நடனமாடிய கோட் பட பாடல் விடியோ 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்தது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) என்ற த... மேலும் பார்க்க

ஆயிரத்தில் ஒருவன் - 2 எப்போது? செல்வராகவன் பதில்!

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் செல்வராகவன் பேசியுள்ளார்.இயக்குநர் செல்வராகவன் - கார்த்தி கூட்டணியில் பிரம்மாண்ட படமாக உருவானது ஆயிரத்தில் ஒருவன். இப்படம் வெளியானபோது கடுமையான எதிர... மேலும் பார்க்க