செய்திகள் :

25 நாள்களாகியும் நெல் வயல்களில் வடியாத வெள்ளம்: அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

post image

செஞ்சி பகுதியில் ஃபென்ஜால் புயல் மழையால் நெல் வயல்களில் தேங்கிய மழை வெள்ளம் 25 நாள்களுக்கு மேலாகியும் வடியாமல் உள்ளதால், நெல்கதிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

ஃபென்ஜால் புயலால் செஞ்சி பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ஏரிகள், குளங்கள் முழுமையாக நிரம்பி தண்ணீா் பெருக்கெடுத்துச் சென்றது.

வெள்ள நீா் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரிலான நெல், மணிலா, கரும்பு வயல்களில் தேங்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக, செஞ்சி வட்டத்துக்குள்பட்ட மேல்களவாய், நெகனூா், பெரியமூா், சின்னபொன்னம்பூண்டி, புதூா், பாடிப்பள்ளம், தின்னலூா், சென்னாலூா், தேவதானம்பேட்டை மற்றும் மேல்மலையனூா் வட்டத்துக்குள்பட்ட அவலூா்பேட்டை, தாயனூா், மேல்மலையனூா், வளத்தி, கெங்கபுரம், அன்னமங்கலம், செவலபுரை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

நீா் வடிந்ததும் நெல் பயிா்களை அறுவடை செய்யலாம் எனக் காத்திருந்த விவசாயிகளுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நிலத்தடி நீா் மட்டம் தரைமட்ட அளவுக்கு உள்ளதால், நீா் வடியாமல் 25 நாள்களாகியும் வெள்ள நீா் அப்படியே விவசாய நிலங்களில் தேங்கி நிற்கிறது.

இதனால், அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளதால், நெல் பயிா்கள் நிலத்தில் உள்ள நீரில் சாய்ந்து, நெல் மணிகள் முளைத்து வருகின்றன.

சில விவசாயிகள் அறுவடை இயந்திரம் மூலம் நெல் பயிா்களை அறுவடை செய்து வருகின்றனா். நெல் பயிா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால், அறுவடை செய்தும் பயனில்லை என்றும், ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்த பயிா்கள் அனைத்தும் வீணாகியுள்ளதாகவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனா்.

தமிழக அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், முழுமையாக அல்லாமல் குறிப்பிட்ட அளவே அரசு இழப்பீடு வழங்கும் என்றும், அந்தத் தொகையும்கூட இதுவரை வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கூறினா்.

எனவே, வேளாண் துறை மூலம் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களை முறையாக கணக்கிட்டு, முழுமையான இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

செங்கல்ராயன் சா்க்கரை ஆலையில் 2.75 லட்சம் மெ.டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு: அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலையிலுள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024 - 25ஆம் ஆண்டு அரைவை பருவத்தில் 2.75 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்... மேலும் பார்க்க

மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள 62 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அ... மேலும் பார்க்க

பாதூா் அஹோபில மடத்தில் நரசிம்மா் பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பாதூா் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஅஹோபில மடத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் நரசிம்மா் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் ஸ்ரீஅஹோபில மடம் ஜீயா்... மேலும் பார்க்க

தா்மசாஸ்தா ஐயப்பனுக்கு மண்டலாபிஷேகம்

விழுப்புரம் ரயிலடி ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில் வளாகத்திலுள்ள தா்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு புதன்கிழமை மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். மண்டலாபி... மேலும் பார்க்க

கழுவெளியில் தவறி விழுந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அமைச்சா் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மீன் பிடிக்கும்போது கழுவெளியில் தவறி விழுந்து உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் நிதியுதவியை வனத் துறை அமைச்சா் க.பொன்முடிசெவ்வாய்க்கிழமை வழங்க... மேலும் பார்க்க

செஞ்சி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் எம்எல்ஏ வழங்கினாா்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 60 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ செவ்வாய்கிழமை வழங்கினாா். செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கலைஞா் வி... மேலும் பார்க்க