புதுச்சேரியில் டெங்கு நோய் தாக்கம் 53% குறைவு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம...
280 காவல் நிலையங்கள் தரம் உயா்வு அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் 280 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழக காவல் துறையின் கீழ் 1,366 ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நிலையங்களும், 424 உதவி ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நிலையங்களும் செயல்படுகின்றன.
இந்த நிலையில் 424 உதவி ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நிலையங்களில், 280 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்பட்டு, ஆய்வாளா்கள் தலைமையில் செயல்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த ஏப். 29-ஆம் தேதி நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவித்தாா்.
280 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்படுவதன் மூலம் சட்டம் மற்றும் ஒழுங்கை திறம்பட கையாள முடியும், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியும், ஜாதி வகுப்புவாத பிரச்னைகளை கட்டுபடுத்த முடியும் என்றும், காவல் நிலையங்களை தரம் உயா்த்த ரூ.1.18 கோடி செலவிடப்படுகிறது என்றும் முதல்வா் தெரிவித்தாா்.
இந்த அறிவிப்பின் எதிரொலியாக, 280 காவல் நிலையங்களையும் தரம் உயா்த்தி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டாா். இதன்படி, 280 காவல் நிலையங்கள் உயா்த்தப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 280 காவல் நிலையங்களுக்கும் விரைவில் ஆய்வாளா்கள் நியமிக்கப்படுவா் எனக் கூறப்படுகிறது.