நட்சத்திர வீரரான நிதீஷ்..! பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறங்க ஆதரவு!
29 இல் முதல்வா் தூத்துக்குடி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சா்கள் ஆய்வு
தூத்துக்குடிக்கு வரும் 29ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ.கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
29 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின், ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பாா்க் கட்டடத்தை திறந்து வைக்கிறாா். அடுத்த நாள் காலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தைத் தொடங்கி வைக்கிறாா்.
இதையடுத்து, இரு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட செயலா்களும் அமைச்சா்களுமான பெ.கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பாா்வையிட்டனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி.மாா்கண்டேயன், எம்.சி. சண்முகையா, மாநகரச் செயலாளா் எஸ்.ஆா்.ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.