செய்திகள் :

3 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்த 10 ஆம் வகுப்பு படித்த போலி மருத்துவர் கைது!

post image

மகராஷ்டிரத்தில் 10 வகுப்பு மட்டுமே படித்து கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்த நபர் போலி மருத்துவர் செய்யப்பட்டார்.

மகராஷ்டிரத்தின் பந்தர்பூர் நகரில் மருத்துவமனை நடத்தி வந்த நபர் தத்தாத்ராய சதாசிவ பவார். இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.

மருத்துவப் பயிற்சி வகுப்பில் 4 நாள்கள் பயிற்சி எடுத்ததாகக் கூறும் இவர், அந்தப் பயிற்சியைக் கொண்டே சொந்தமாக மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் ரூ. 500 வரை வாங்கிவந்த இவர், தினசரி 70-80 நோயாளிகள் வரை பரிசோதித்துள்ளார்.

இதையும் படிக்க | சொட்டு தண்ணீர் குடிக்காமல் 11 நாள்; கிரீஷ்மாவுக்கு தூக்கு: நீதிமன்ற தீர்ப்பில் சொல்லியிருப்பது என்ன?

நீரிழிவு நோய், எலும்புத் தேய்மானம் போன்ற தீவிர மருத்துவப் பிரச்னைகளுக்கும் இவர் ஆலோசனை வழங்கி வந்தார்.

3 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்த நிலையில், திடீரென இவர் மீது அந்தப் பகுதி மக்களுக்கு சந்தேகம் வரத் தொடங்கியதால் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்,

காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோர் இவரின் மருத்துவமனையில் நடத்திய சோதனையில் மருத்துவச் சான்றிதழோ, மருத்துவமனை செயல்படுவதற்கான உரிமமோ எதுவுமின்றி இவர் மருத்துவமனையை நடத்திவந்தது கண்டறியப்பட்டது.

அதுமட்டுமின்றி, 3 ஆண்டுகளாக பந்தர்பூர் மட்டுமின்றி ஷேகான் நகரிலும் இவர் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளார். போலி மருத்துவர் எனத் தெரியாமலே பலரும் இவரிடம் மருத்துவம் பார்த்துள்ளனர்.

இந்த மோசடி அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவரது மருத்துவமனையை மூடியுள்ளனர். அவர் மீது வேறு வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.

உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!

உத்தரப் பிரதேசத்தில் காதலியை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார். மதம் மாறி திருமணம் செய்ய காதலர் வீட்டில் சம்மதிக்காத நிலையில், பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின... மேலும் பார்க்க

'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்' - தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர்

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார். கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனைய... மேலும் பார்க்க

சாகும்வரை சிறை போதாது! மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் மமதா அதிருப்தி

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மாலிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக மாநிலங்களவை எம்.பி., ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, ப... மேலும் பார்க்க

யுஜிசி புதிய விதிகள்: 9 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

யுஜிசியின் புதிய விதிகளுக்கு சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நி... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம்

கொல்கத்தா பெண் மருத்துவா் வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு... மேலும் பார்க்க