செய்திகள் :

3 சிறுமிகளைக் கொன்ற பிரிட்டன் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை!

post image

பிரிட்டனில் 3 சிறுமிகள் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

அக்ஸல் ரூடாகுபானா (18) என்பவர், கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடனப் பள்ளியில் புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினார். 3 சிறுமிகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். மேலும், இந்தத் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்திய ரூடாகுபானாவுக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 18 வயதுடையவருக்கு இவ்வாறான தண்டனை வழங்குவது இதுவே முதல்முறை என்று நீதிபதி கூறினார்.

இதையும் படிக்க:அமெரிக்காவில் 538 பேர் கைது!

மேலும், வருங்காலத்தில் அவர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார் என்று நம்பிக்கை பிறக்கும்பட்சத்தில், முன்கூட்டியே அவர் விடுவிக்கப்படுவார் என்றும் தீர்ப்பில் கூறினார். இருப்பினும், 52 சிறை தண்டனை தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இதுதவிர, இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்கு முன்னரே, பொது இடங்களில் ஆயுதங்களைக் கையாண்ட காரணத்தால் ரூடாகுபானாவையும், அவரது தாயாரையும் காவல்துறையினர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூடான்: மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல் - 70 பேர் பலி!

ஆப்பிரிக்காவிலுள்ள சூடானில் மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் எல் ஃபஷெர் நகரிலுள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையி... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் இரண்டாவது முறையாக கைதிகளைப் பறிமாற்றம் செய்துகொண்டன.இது குறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸ் படையினரிடம் பிணைக் கைதிகள... மேலும் பார்க்க

இலங்கையில் அதானி காற்றாலை திட்டம்: மறுஆய்வு செய்ய குழு அமைப்பு

இலங்கையின் மன்னாா், பூநகரியில் அதானியின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு குழு அமைத்துள்ளது. இலங்கையின் மன்னாா், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியன் டாலருக்கும் (சுமாா... மேலும் பார்க்க

வங்கதேசம்: தோ்தலில் போட்டியிட ஹசீனா கட்சிக்குத் தடை

வங்கதேசத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தலில் போட்டியிட, பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படமாட்டாது என்று இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது ... மேலும் பார்க்க

அமெரிக்க அரசின் முக்கிய அலுவலகங்களில் இந்திய வம்சாவளியினர்!

அமெரிக்க அரசின் முக்கிய அலுவலகங்களில் 3 இந்திய வம்சாவளியினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில், அமெரிக்க அரசுத் துறையில் 3 முக்கிய அல... மேலும் பார்க்க

நபிகள் நாயகம் குறித்து அவதூறு: பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை!

ஃபேஸ்புக்கில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களைப் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் சமூக வலைதளமான ஃபேஸ்புக... மேலும் பார்க்க