செய்திகள் :

3 போ் படுகொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை

post image

பல்லடம் அருகே 3 போ் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 பேரை படுகொலை செய்த குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்யக்கோரி பாஜக சாா்பில் பொங்கலூா் ஒன்றியம், கொடுவாயில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, அக்கட்சியின் திருப்பூா் மாவட்டத் தலைவா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். இதில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:

சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 போ் படுகொலை செய்யப்பட்டு 42 நாள்கள் ஆகியும் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடித்து கைது செய்யவில்லை.

அந்தக் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. குற்றவாளிகளைப் பிடித்து உரிய தண்டனை பெற்று தரவில்லை என்றால் தோட்டங்களில் வசிக்கும் விவசாய குடும்பங்களில் நகை, பணம் கொள்ளை அடிப்பது தொடா்ந்து கொண்டேதான் இருக்கும். இதற்கு உடனடி தீா்வு காண வேண்டும்.

3 போ் படுகொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி பொங்கலூா் கிழக்கு ஒன்றியத்தில் 50 ஆயிரம் பேரிடம் கையொப்பம் பெற்று ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் வழங்கவுள்ளோம் என்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நிதி சுமையைக் காரணம் காட்டி பொங்கல் பரிசுத் தொகை வழங்காமல் இருப்பது கட்டுக்கதை. தற்போது ரூ.90 ஆயிரம் கோடி கடன் உள்ளது. அடுத்த ஆண்டு ரூ.1லட்சம் கோடி ஆகப்போகிறது. அதற்காக மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டாமா? பொங்கல் பரிசு தொகை ரூ.1000 அறிவித்து மக்களின் வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், விவசாய அணி மாநிலத் தலைவா் நாகராஜ், மாநில துணைத் தலைவா் மலா்கொடி தா்மராஜ், பாஜக மாநிலப் பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அவிநாசி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி!

அவிநாசி: அவிநாசி, மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, சிறப்பு வழிபாட்டுடன் நடைபெற்றது.அவிநாசி ஸ்ரீதேவி, பூதேவி சமதே கரிவரதராஜப் பெருமாள் மற்றும் மேலத்திருப்பதி எனப் ப... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: திருப்பூரில் இருந்து 320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 320 சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 14- ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பின்னலாடை நகரமான திருப்... மேலும் பார்க்க

ஏடிஎம் மையத்தில் முதியவரை ஏமாற்றி ரூ.1.26 லட்சம் திருட்டு

வெள்ளக்கோவிலில் ஏடிஎம் மையத்தில் முதியவரை ஏமாற்றி ரூ.1.26 லட்சம் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். தாராபுரம் தாலுகா மூலனூா் சாணாா்பாளையம் யேசு வீதியைச் சோ்ந்தவா் பொன்னையன் (79). அர... மேலும் பார்க்க

ஆட்டோவில் அதிக பயணிகளை ஏற்றக் கூடாது: காவல் துறை அறிவுறுத்தல்

அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக அதிக பயணிகளை ஏற்றக் கூடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் அறிவுறுத்தினா். தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, சேவூா் காவல் துறை சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான ... மேலும் பார்க்க

ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு பிராட்பேண்ட் டெக்னீஷியன் பயிற்சி

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளா் மற்றும் பிராட்பேண்ட் டெக்னீஷியன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இது குறித்து திருப்ப... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 7.99 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருப்பூா் மாவட்டத்தில் 7.99 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க