செய்திகள் :

3 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் விமானத்தை ரத்து செய்ய உத்தரவு!

post image

தில்லியில் ஏற்பட்டுள்ள காற்றுமாசு காரணமாக விமானங்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், 3 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் விமானத்தை ரத்து செய்ய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

தில்லியில் சரிந்து வரும் வெப்பநிலையும் அடா் புகை மூட்டமும் நாளுக்கு நாள் நிலைமையை மோசமாக்கி வருகின்றன. இதன் காரணமாக சாலைகளிலேயே இரவு முதல் நண்பகல் வரை பல இடங்களில் காண்புதிறன் குறைந்துள்ளது.

இதனிடையே, தில்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது கடும் சவால் நிறைந்த பணியாக மாறியுள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : உக்ரைன் போர்: "கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கும்'

இந்த நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் உயர்நிலைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விமானப் போக்குவரத்து சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள், வானிலை மைய அதிகாரிகள், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை மத்திய அமைச்சகம் வெளியிட்டது.

விமான தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்குமாறும், பயண இடையூறுகளைக் குறைக்க செக்-இன் கவுண்டர்களில் அதிகளவிலான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்யுமாறும் விமான நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், 3 மணிநேரத்துக்கு மேல் விமானத்தை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டால், விமானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி!

புது தில்லி: தில்லி பேரவைத் தேர்தல் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.தி... மேலும் பார்க்க

அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!

அதானி பங்குகளில் முதலீடு செய்த எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளரான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 7 நாடுகளில் தனது சொத்துகளை வைத்து... மேலும் பார்க்க

அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு: அதானி குழுமம் விளக்கம்

அதானி கிரீன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றமும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையமும் பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, முற்றிலும் மறுக்கிறோம் என்று... மேலும் பார்க்க

முதல்வர்களையே கைது செய்யும்போது அதானியை பாதுகாப்பது ஏன்? ராகுல்

தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ளார்.சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்கா... மேலும் பார்க்க

பாஜக பகிர்ந்த சுப்ரியா சுலேவின் ஆடியோ போலியானதா?

மகா விகாஸ் அகாதி கட்சித் தலைவர் சுப்ரியா சுலே, காங்கிரஸ் தலைவர் நானா படோல், ஐபிஎஸ் அதிகாரியுடன் உரையாடுவதாக பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஆடியோப் பதிவு போலியானதா என்ற கேள்வி ... மேலும் பார்க்க

அரசு பங்களாவைப் புனரமைத்ததில் முறைகேடு: கேஜரிவாலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அரசு பங்களாவைப் புனரமைத்ததில் முறைகேடு செய்தாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கலால் கொள்கை முறைகேடு ... மேலும் பார்க்க