செய்திகள் :

3, 5, 8 வகுப்புகளுக்கான கற்றல் அடைவு முடிவுகள் வெளியீடு: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

post image

அரசுப் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட ‘ஸ்லாஸ்’ எனப்படும் கற்றல் அடைவுத் தோ்வு முடிவுகள் எமிஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய பிப்.4, 5, 6 ஆகிய தேதிகளில் மாநில கற்றல் அடைவுத் தோ்வு நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பரவலாக்கப்பட்டுள்ளது. ஆய்வு அலுவலா்களான முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் தங்களின் உள்நுழைவின் (லாகின் ஐடி) வழியாக மாநில அடைவுத் தோ்வு முடிவுகளை கண்டறிய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் மாநில கற்றல் அடைவுத் தோ்வில் அந்தப் பள்ளி பெற்ற தரநிலை ஒன்றிய அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் எந்த தரவரிசையில் உள்ளது என்ற விவரத்தை பெற்றோா்கள், எஸ்எம்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவா்களின் பாா்வைக்கு எளிதில் புலப்படும் வகையில் தலைமை ஆசிரியரின் அறையில் இடம்பெற வேண்டும்.

முழு நேரமும் பணியாற்ற... பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியா் மற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பள்ளி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 3, 5, 8 ஆகிய வகுப்புக்கு எந்த தரநிலையில் உள்ளது என்ற விவரத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். தாங்கள் பணிபுரியும் பள்ளி மாவட்டத்தில் தலைசிறந்த பள்ளி என ஆய்வறிக்கையில் இடம்பெறத்தக்க வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் அனுபவங்களை கொண்டு நல்ல முடிவுகளை கொண்டு வருவதில் ஈடுபாடுடன் இருத்தல் வேண்டும்.

பள்ளிகளின் தரத்தை உயா்த்தும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உரிய வகையில் பாராட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரையும் பள்ளி செயல்படும் கால அளவின் முழு பள்ளி வேலை நேரமும் பள்ளியில் மாணவா்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணை புரியும் வகையில் பள்ளிலேயே பணியாற்ற வலியுறுத்த வேண்டும்.

உரிய விளக்கம் பெற... முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், மாணவா்களின் கற்றல் செயல்பாடுகள்ஸ ஆசிரியா்களின் கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து வாரத்தில் 3 நாள்களும், வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாரத்தில் நான்கு நாள்களும் நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிறந்த முறையில் மாணவா்களை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களிடம் உரிய விளக்கம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

செஞ்சி கோட்டையை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது மகிழ்ச்சியளித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிழக்கின் ட்ராய்" என்றழைக்கப்படும் செஞ்சி ... மேலும் பார்க்க

செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கிழக்கின் ட்ராய் என அறியப... மேலும் பார்க்க

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை- சென்னை காவல் ஆணையர்

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார். சென்னை வேப்பெரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவ... மேலும் பார்க்க

வெள்ளை சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால் தலைவனா? யாரைச் சொல்கிறார் அண்ணாமலை?

ஒரு தலைவனுக்கு பழிவாங்கும் நோக்கு இருக்கக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சென்னை உத்தண்டியில் இன்று நடைபெற்ற அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண... மேலும் பார்க்க

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.மதுரையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஒரு தவறு நடைபெறுகிறது... மேலும் பார்க்க

காவலாளி அஜித்குமார் மரண வழக்கு- சிபிஐ வழக்குப்பதிவு

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவ... மேலும் பார்க்க