செய்திகள் :

30 நாளில் படப்பிடிப்பை முடிந்த பிரம்மயுகம் இயக்குநர்!

post image

நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.

தொடர்ந்து, வர்ஷங்களுக்கு ஷேஷம் திரைப்படத்தில் நாயகனாக நடித்து அதிலும் வெற்றிபெற்றார். அதேநேரம், குறைவான படங்களிலேயே நடிக்கும் பிரணவ், உலகம் முழுவதும் சுற்றும் பயணியாகவும் இருக்கிறார்.

எப்போதும் வெளிநாட்டு பயணங்களிலேயே இருப்பதும் அங்கு இசைக்கருவிகளை வாசித்து எளிமையான வாழ்க்கையை வாழ்வதையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார். பெரும்பாலும் கேரளத்தில் இருக்க மாட்டார்.

இந்த நிலையில், பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமானார்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் ஹாரர் பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 25 ஆம் தேதி துவங்கி நிலையில், சரியாக ஒரு மாதத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித் குமார்!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நடிகர் அஜித் குமார், வீடு திரும்பினார். திடீர் உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித் குமார் இன்று... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முனோட்ட விடியோ!

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், ய... மேலும் பார்க்க

பிரேமலு பிரபலங்கள் நிறைந்த ’ப்ரோமான்ஸ்’-ன் ஓடிடி வெளியீடு!

‘ப்ரோமான்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநர் அருண் டி. ஜோஸ் இயக்கத்தில் நடிகர்கள் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், ஷியாம் மோஹன் மற்றும் மஹிமா ந... மேலும் பார்க்க

ஒசாகா திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக அஜித், லியோ படத்துக்கு 6 விருதுகள்!

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் அஜித், த்ரிஷாவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2005ஆம் ஆண்டுமுதல் விருதுகளை வழங்கி வருகின்றன. தற்போத... மேலும் பார்க்க

அனிருத் குரலில் ‘கிஸ்’ படத்தின் முதல் பாடல்!

நடிகர் கவின்-ன் புதிய திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.சின்னத் திரை மூலம் பிரபலமாகி வெள்ளித் திரையில் கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் கவின். பிக்பாஸ் மூலம் மற்றொரு பரிமாணத்தை அடைந்த அவர் அதன் ப... மேலும் பார்க்க

உண்மையான ஆட்டநாயகன் இவர்தான்..! பெருந்தன்மையாக நடந்துகொண்ட பிஎஸ்ஜி வீரர்!

சாம்பியன்ஸ் லீக் முதல்கட்ட அரையிறுதியில் வென்ற பிஎஸ்ஜி அணியின் ஆட்ட நாயகன் தானில்லை கோல் கீப்பர்தான் என விடின்ஹா கூறியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் லீக்கின் ஆர்செனல் அணி... மேலும் பார்க்க