செய்திகள் :

30 நாள் போர்நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உக்ரைன் முன்வைத்த 5 முக்கிய முடிவுகள்!

post image

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். பூட்டிய அறைக்குள் சுமார் 7 மணிநேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமான முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளாக உக்ரைனுக்கான பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும், ரஷியாவுடன் பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் 30 நாள்கள் போர் நிறுத்தம் மற்றும் அமைதி பேச்சுவார்த்தையும் நடத்தப்பட வேண்டும், உக்ரைன் நாட்டு கைதிகள், பொதுமக்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும், பேச்சுவார்த்தையில் ஐரோப்பாவும் ஒருபகுதியாக இருக்க வேண்டும், உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவி செய்வதுடன், கனிமவள ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா - உக்ரைன் நாடுகளின் நீண்டகால உறவையும் பேண வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க:என்னை இங்குதான் புதைத்தார்கள்; சிறுவன் காட்டிய இடத்தில் தோண்டியவர்களுக்கு அதிர்ச்சி!

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது ``போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவுக்கும் செல்லவிருக்கிறோம். போர் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறோம். எங்களால் முடியாவிட்டால், நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம்’’ என்று தெரிவித்தார்.

மேலும், ஜெட்டா பேச்சுவார்த்தை குறித்து உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ் கூறியதாவது, உக்ரைன் தரப்பு வாதங்களைப் புரிந்துகொண்டு பரிசீலிக்கும் அமெரிக்காவுக்கும் அதிபர் டிரம்ப்புக்கும் நன்றி. இந்த முன்மொழிவை ஏற்க உக்ரைன் தயாராக உள்ளது. ரஷியாவையும் அவ்வாறே செய்யச் சொல்வது அமெரிக்காவின் பொறுப்பே.

ரஷியா ஒப்புக் கொண்டால், போர்நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வரும். போரின் முதல் நொடியிலிருந்தே உக்ரைன் அமைதியைத்தான் நாடுகிறது, மேலும், போர் மீண்டும் வராமல் தடுக்க முடிந்தவரை, விரைவாகவும் நம்பகமான முறையிலும் அதனை அடைய எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் ரயில் சிறைபிடிப்பு: 33 பயங்கரவாதிகள் கொலை... மீட்புப் பணிகள் நிறைவு!

பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் 33 பயங்கரவாதிகளைக் கொன்று 300-க்கும் மேற்பட்ட பயணிகளை அந்நாட்டு ராணுவம் மீட்டெடுத்த நிலையில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன. ரயில் சிறைப்பிட... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு!

உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் - ரஷியா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!

பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பேரை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. இந்த மீட்புப் போராட்டத்தில் 30 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், சில பிணைக் கைதிகள்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பிறந்த குழந்தை! பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த குழந்தையைப் பார்த்த அனைவரும் தங்களது கண்ணையே நம்ப முடியாமல் கடும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மனித வெடிகுண்டுகளாக பயணிகள்! 250 பேரை மீட்பதில் சிக்கல்!

பாகிஸ்தானில் பயங்கராவதிகள் சிறைப்பிடித்துள்ள ரயிலில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 250 பயணிகளை மீட்பதில் சிக்கல் தொடர்ந்து வருகின்றது.இதுவரை 155 பயணிகளை ரயிலில் இருந்து மீட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்த... மேலும் பார்க்க

டெஸ்லா காருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்! வெள்ளை மாளிகைக்கு புதுவரவு.!

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகை முன் அவருடன் எலான் மஸ்க் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்க அதிபரான டொனால... மேலும் பார்க்க