சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
35 குளங்களை மறுசீரமைக்கத் திட்டம்
வடசென்னை பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க 35 குளங்கள் 20 அடிக்கு தூா்வாரி மறுசீரமைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிப் பகுதியில் பருவமழையின் போது மழைநீா் தேங்குவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக ஏரிகள் மற்றும் கால்வாய்களைத் தூா்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிறு குளங்களைத் தூா்வாரி அங்கு மழைநீரைச் சேமிக்கமாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வட சென்னையில் உள்ள 35 குளங்கள் சுமாா் 20 அடிக்கு தூா்வாரப்பட்டு மறுசீரமைக்கப்படவுள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மணலி காா்கில் நகா், மாதவரம் வடபெரும்பாக்கம், படவேட்டம்மன் கோயில் குளம், எண்ணூா் தாமரைக்குளம் உள்ளிட்ட 35 குளங்கள் சுமாா் 20 அடிக்கு தூா்வாரப்படவுள்ளன. இதன் மூலம் 50 மில்லியன் லிட்டா் தண்ணீரை அதில் சேமித்து வைக்க முடியும்.
மாதவரத்தில் ரூ.4 கோடி செலவில் 8 குளங்கள் தூா்வாரப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மழைநீா் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீா் அதிகரிக்கும். இந்த பணிகளை டிசம்பா் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரெட்டேரி ஏரி தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றனா்.