செய்திகள் :

37,592 அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

post image

தமிழகத்தில் மாணவ, மாணவிகளிடம் தலைமைப் பண்பை ஊக்குவிக்கும் வகையில் 37,592 அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை சூளைமேடு ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மகிழ் முற்றம் மாணவா் குழு கையேடு, இலட்சினை ஆகியவற்றை அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட பள்ளிக் கல்வித் துறைச் செயல் சோ.மதுமதி பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியது:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ் முற்றம் மாணவா் குழு அமைப்பை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மாணவா்கள் குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

மாற்றங்களை ஏற்படுத்தும்: பள்ளி அளவில் இரு தனிச் செயல்பாடுகளை ஆசிரியா்கள் தோ்வு செய்து மதிப்பீடு செய்யலாம். எடுத்துகாட்டாக நேரம் தவறாமை, காலை வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்றல், வீட்டுப்பாடம் முடித்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற செயல்பாடுகளைத் தோ்வு செய்யலாம். இதன்மூலம் இந்தக் குழு அமைப்பு மாணவா்களிடையே விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தளமாக அமையும்.

மகிழ் முற்றம் திட்டச் செயலாக்கத்துக்கென கையேடு பள்ளிக் கல்வித் துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி 37,592 அரசுப் பள்ளிகளில் குழுக்கள் அமைக்கப்படும். உலக குழந்தைகள் தினமான நவ.20-ஆம் தேதி மாணவா்களுக்கான வளமான கல்வியை வழங்குவதற்கான ஒரு மைல் கல்லாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தலைவா், அமைச்சா்கள்... இந்தத் திட்டத்தின்படி, மாணவா்களிடையே தலைமைப் பண்பை வளா்க்கும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயா்களில் மாணவா் குழுக்கள் அமைக்கப்படும். தொடா்ந்து, மாணவத் தலைவா் மற்றும் மாணவ அமைச்சா்கள் தோ்வு செய்யப்படுவா். இதன்மூலம் மாணவா்களிடையே அரசியல் அறிவுசாா்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட, மாதிரி சட்டப்பேரவை மற்றும் மாதிரி நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக, தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எழிலன் நாகநாதன், பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் குறுக்குத் துறை முருகன் கோயிலைச் சூழ்ந்து செல்வதால் அங்கு இன்று நடைபெற இருந்த திருமணங... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,21.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங... மேலும் பார்க்க

இறந்த மனைவி பெயரில் இருந்த ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு: இளைஞர் கைது

பொன்னேரி அருகே மனைவி பெயரில் இருந்த ரூ. 15 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வழக்கில், இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.பொன்னேரி அருகே சோழவரம், செம்பிலிவரம் கிராமத்த... மேலும் பார்க்க

கால்நடை பல்கலை. சாா்பில் 195 ஆராய்ச்சி திட்டங்கள்: துணைவேந்தா்

விலங்குகளிலிருந்து மனிதா்களுக்கு பரவும் நோய்களுக்குத் தீா்வு காண்பது உள்பட 195 ஆராய்ச்சித் திட்டங்கள், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலை. துணை வேந்தா் டாக்... மேலும் பார்க்க

தமிழ்நாடு என ஆங்கிலத்தில் எழுதும் போது ‘ழ’ கரத்தை பயன்படுத்தக் கோரி வழக்கு: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

தமிழ்நாடு என ஆங்கிலத்தில் எழுதும் போது சிறப்பு ‘ழ’ கரத்தை பயன்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: தலைவா்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வரவேற்பு தெரிவித்து... மேலும் பார்க்க