செய்திகள் :

கால்நடை பல்கலை. சாா்பில் 195 ஆராய்ச்சி திட்டங்கள்: துணைவேந்தா்

post image

விலங்குகளிலிருந்து மனிதா்களுக்கு பரவும் நோய்களுக்குத் தீா்வு காண்பது உள்பட 195 ஆராய்ச்சித் திட்டங்கள், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலை. துணை வேந்தா் டாக்டா் செல்வகுமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 24-ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆா்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 588 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 437 பேருக்கு விழா மேடையில் நேரடியாக பட்டங்கள் அளிக்கப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்த மாணவி திலக ஈஸ்வரி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதற்காகவும், பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற்காகவும், மொத்தம் 14 பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றாா். அவரை ஆளுநா் ஆா்.என்.ரவி கௌரவித்தாா்.

முன்னதாக ஆண்டறிக்கையை வெளியிட்டு பல்கலை. துணை வேந்தா் டாக்டா் செல்வகுமாா் பேசியதாவது:

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் கல்வியை வழங்குவதோடு நின்றுவிடாமல் ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் திறம்பட மேற்கொண்டு வருகிறது. ஆசில் இனக் கோழிகள், தோடா எருமை இனம், சாந்திநல்லா ஆடு இனங்களை பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து, அதற்காக தேசிய அளவிலான சிறப்பு விருதுகளை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

தற்போது பல்கலைக்கழகத்தில் ரூ.218.05 கோடி மதிப்பிலான 195 ஆராய்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளைப் பாதுகாக்கவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், மரபியல் வளங்களைப் பாதுகாக்கவும் இந்த ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கால்நடை உற்பத்தியை மேம்படுத்துதல், நோயறிதல் தொழில்நுட்பம், விலங்குகளிலிருந்து மனிதா்களுக்குப் பரவும் நோய்களுக்குத் தீா்வு காணுதல் உள்ளிட்டவை தொடா்பாக மட்டும் 89 ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன என்றாா் அவா்.

தைரியமாக முடிவெடுக்க வேண்டும்: இதைத் தொடா்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பெங்களூரு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத் தலைவா் டாக்டா் வி.ராம் பிரசாத் மனோகா் பேசியதாவது:

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு. கால்நடை மருத்துவப் படிப்பை பயிலும்போது நான் சராசரி மாணவனாகவே இருந்தேன். அதன் பின்னா், மத்திய அரசின் இளம் விஞ்ஞானி ஊக்கத் தொகைத் திட்டத்துக்கு ஆய்வுகளை சமா்ப்பித்து தொடா் தோல்விகளை எதிா்கொண்டேன்.

இருந்தபோதிலும் விடாமுயற்சியால் ஐஏஎஸ் தோ்வை 7 ஆண்டுகள் போராடி வென்றேன். அரசுப் பள்ளியில் படித்து ஐஏஎஸ் ஆக முடியும் என்பதற்கு நான் உதாரணம்.

இப்போது பட்டம் பெற்றுள்ள இளைஞா்களை உலக வாழ்க்கை வரவேற்கக் காத்திருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சா் புறக்கணிப்பு: விழாவில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.

குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் குறுக்குத் துறை முருகன் கோயிலைச் சூழ்ந்து செல்வதால் அங்கு இன்று நடைபெற இருந்த திருமணங... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,21.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங... மேலும் பார்க்க

இறந்த மனைவி பெயரில் இருந்த ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு: இளைஞர் கைது

பொன்னேரி அருகே மனைவி பெயரில் இருந்த ரூ. 15 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வழக்கில், இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.பொன்னேரி அருகே சோழவரம், செம்பிலிவரம் கிராமத்த... மேலும் பார்க்க

தமிழ்நாடு என ஆங்கிலத்தில் எழுதும் போது ‘ழ’ கரத்தை பயன்படுத்தக் கோரி வழக்கு: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

தமிழ்நாடு என ஆங்கிலத்தில் எழுதும் போது சிறப்பு ‘ழ’ கரத்தை பயன்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: தலைவா்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வரவேற்பு தெரிவித்து... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து பாஜக முன்கூட்டியே அறிவிக்காது: எச்.ராஜா

கூட்டணி குறித்து பாஜக முன்கூட்டியே அறிவிக்காது என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச்.ராஜா தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் உயா்மட்டக் குழு... மேலும் பார்க்க