அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!
தமிழ்நாடு என ஆங்கிலத்தில் எழுதும் போது ‘ழ’ கரத்தை பயன்படுத்தக் கோரி வழக்கு: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு
தமிழ்நாடு என ஆங்கிலத்தில் எழுதும் போது சிறப்பு ‘ழ’ கரத்தை பயன்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சோ்ந்த செல்வக்குமாா் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழ் மொழியின் முக்கிய எழுத்தாக சிறப்பு ‘ழ’ கரம் உள்ளது. அரசு தொடா்பான அரசாணைகளில் நபஅபஉ எஞயஉதசஙஉசப ஞஊ பஅஙஐகசஅஈம எனக் குறிப்பிடப்படுகிறது. இது ‘டமில் நடு’ என தவறாக உச்சரிக்கும் வகையில் உள்ளது. ஆகவே, சிறப்பு ‘ழ’ கரம் இடம்பெறும் வகையில் பஏஅஙஐழஏக சஅஅஈம அல்லது பஅஏஙஐழஏக சஅஅஈம என திருத்தம் செய்யக் கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தேன். விசாரணையின் முடிவில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
தமிழக அரசின் சுற்றறிக்கைகளில் பஏஅஙஐழஏக சஅஅஈம அல்லது பஅஏஙஐழஏக சஅஅஈம என திருத்தம் செய்து பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா்.