செய்திகள் :

4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டாா் தல்லேவால்!

post image

பஞ்சாப் விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் 4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைவிட்டாா்.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு பிப்.13 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் ஷம்பு, கனெளரி எல்லை பகுதிகளில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அந்த எல்லை பகுதிகளில் அவா்கள் போராட்டம் மேற்கொண்டு வந்தனா்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு நவ.26-ஆம் தேதிமுதல் மூத்த விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாா்.

விவசாயிகளின் போராட்டம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது உண்ணாவிரத போராட்டத்தை தல்லேவால் கைவிட்டதாக பஞ்சாப் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவா் தனது போராட்டத்தை தொடா்ந்து வந்தாா்.

இந்நிலையில், பஞ்சாபின் ஃபதேகா் சாஹிப் மாவட்டம் சா்ஹிந்த் பகுதியில் உள்ள தானிய சந்தையில் விவசாயிகள் மகாபஞ்சாயத்து கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தனது உண்ணாவிரத போராட்டத்தை 130 நாள்களுக்குப் பின்னா் தல்லேவால் கைவிட்டாா். இதுதொடா்பாக அவா் கூட்டத்தில் கூறுகையில், ‘பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்கியும், அவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்தும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறேன். எனினும் விவசாயிகள் போராட்டம் தொடரும்’ என்றாா்.

தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக மே 4-ஆம் தேதி மத்திய அரசுடன் விவசாயத் தலைவா்கள் பேச்சுவாா்த்தை நடத்துவா் என்று செய்தியாளா்களிடம் தல்லேவால் தெரிவித்தாா்.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க