'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல்
பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வு மூலம் 427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து விதமான ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்தாய்வு மூலமாக விருப்ப மாறுதல் பெற்றுள்ளனா்.
இந்த நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு முதன்மைக் கல்வி அலுவலகங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வியில் 12 தலைமையாசிரியா்கள், 161 முதுநிலை ஆசிரியா்கள், 8 கணினி ஆசிரியா்கள், 236 பட்டதாரி ஆசிரியா்கள், 4 இடைநிலை ஆசிரியா்கள், 6 உடற்கல்வி ஆசிரியா்கள் என மொத்தம் 427 போ் மனமொத்த மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அனைவருக்கும் அவா்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது.
இதற்கான மாறுதல் ஆணைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வாயிலாக ஆசிரியா்களுக்கு அளிக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.