டிசம்பர் என்றாலே.. பயங்கர நிலநடுக்கம்! எப்படி இருக்கிறது வானூட்டு தீவு?
44 வருட திருமண வாழ்க்கை; ரூ.3 கோடி கொடுத்து 73 வயது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற விவசாயி
ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித் சிங்(70). இவர் தனது 73 வயது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரிடமிருந்து விலகி இருந்தார். 1980ம் ஆண்டு திருமணம் செய்த இருவருக்கும் 3 குழந்தைகள் இருக்கிறது. இருவருக்கும் இடையே 2006-ம் ஆண்டு முதல் முறையாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கர்னல் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி ரஞ்சித் சிங் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் ரஞ்சித் சிங் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
விவசாயியான ரஞ்சித் சிங் தனது மனைவியை விவாகரத்து செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இவ்வழக்கு 11 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இறுதியாக கடந்த நவம்பர் மாதம் மத்தியஸ்தர்கள் முன்னிலையில் இரு தரப்பினர் இடையே கோர்ட் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் கணவன் மற்றும் மனைவி மேலும் அவர்களின் பிள்ளைகளும் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் இருதரப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதில் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ரூ.3.07 கோடி கொடுக்க விவசாயி சம்மதம் தெரிவித்தார். இதனை ரொக்கமாகவும், டி.டி.யாகவும், தங்க நகைகளாகவும், வெள்ளி நகைகளாகவும் கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.
இதில் 2.16 கோடி மதிப்புள்ள நிலமும் அடங்கும். மேலும் ரூ.50 லட்சம் ரொக்கமாக கொடுக்கப்பட்டது. இப்பணம் முழுவதும் விவசாயத்தின் மூலம் ரஞ்சித் சிங் சம்பாதித்து இருந்தார். 40 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களும் மனைவிக்கு கொடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட இறுதி ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்ட தொகை இறுதியானது என்றும், மேற்கொண்டு ரஞ்சித் சிங் சொத்தில் எந்த விதத்திலும் உரிமை கோரக்கூடாது என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியதோடு, ரஞ்சித் சிங் இறந்த பிறகு கூட அவரது சொத்துக்கு உரிமைகோரக்கூடாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...