செய்திகள் :

5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

post image

கம்பிவட இணைப்பற்ற 5 ஜி சேவைகளை அதிக பயனர்களுக்கு வழங்கும் நிறுவனம் குறித்த தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜியோ நிறுவனம் அதிக 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாகவும், இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல் போன்றவை உள்ளன. தற்போது, கம்பி இணைப்பற்ற 5 ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் அதிக பயனர்களைக் கொண்டு ஜியோ முன்னிலை வகித்து வருகிறது.

2025 ஜூலை நிலவரப்படி, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், ஜி யோ நிறுவனம் கம்பிவடமற்ற 5 ஜி இணைப்பில் 3,37,789 பயனர்களைக் கொண்டுள்ளது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனம் 2,11,072 கம்பிவடமற்ற 5 ஜி பயனர்களைக் கொண்டுள்ளது.

எனினும் மாதாந்திர பயனர்களின் விகிதத்தில் ஜூலை நிலவரப்படி ஏர்டெல் நிறுவனம் 12.12% பயனர்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் 5.53% பயனர்களை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. பெரும்பாலான பயனர்கள் ஏர்டெல் சேவையை விரும்புவதை இந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

எனினும், ஒட்டுமொத்தமாக இதுவரை 64.45 லட்சம் 5 ஜி பயனர்களை ஜியோ நிறுவனம் கொண்டுள்ளது. ஆனால், ஏர்டெல் நிறுவனம் 19.53 லட்ச பயனர்களை மட்டுமே கொண்டுள்ளது. (ஜூலை 2025 நிலவரம்)

தொலைத்தொடர்பு சேவையில் இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும், பிரீமியம் 5 ஜி பயனார்கள் கொண்ட சந்தையை ஆக்கிரமிப்பதையே இரு நிறுவனங்களும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொலைத்தொடர்பு சேவையில் ஜியோ நிறுவனம் 50.62% சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ளது. இதேகாலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 31.18% பங்குகளை மட்டுமே கொண்டுள்ளது. எஞ்சிய 18% பங்குகள் பிஎஸ்என்எல், வோடாஃபோன் - ஐடியா போன்ற மற்ற நிறுவனங்கள் கொண்டுள்ளன.

இதையும் படிக்க | இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

Jio Continues to Lead 5G FWA Subscriber Addition in India

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை

இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும்’ என்று அந்த நாட்டின் நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் தொடா்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது

ஜம்மு-காஷ்மீரின் சா்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்களை கடத்தி வந்த 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஹிராநகா் செக்டாரில் உள்ள சான் தண்டா கிராமத்தில் சா்வதேச எல்லையொட்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு கெடு: நியாயப்படுத்த முடியாது

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க சில சந்தா்ப்பங்களில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவா், ஆளுநா்களுக்கு காலக்கெடு விதிப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் ... மேலும் பார்க்க

மேற்கு வங்காள புலம்பெயா்ந்தவா்கள் தொடா்பான தீா்மானம்: திரிணமூல்-பாஜக மோதல்; பேரவையில் அமளி

வெளி மாநிலங்களில் வசிக்கும் வங்காள மொழி பேசும் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீா்மானம் மீதான விவாதத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், எதிா்க்... மேலும் பார்க்க

தண்டனை குறைப்பு சட்டபூா்வ உரிமை: உச்சநீதிமன்றம்

தண்டனை குறைப்பு என்பது அரசியல் சாசன உரிமை மட்டுமல்ல; சட்டபூா்வ உரிமையுமாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 16 வயதுக்குள்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தால் வழங்கவேண்டிய தண்டனையை இந்திய தண்ட... மேலும் பார்க்க