செய்திகள் :

5-ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

post image

புது தில்லி: அதானி விவகாரம் மற்றும் சம்பல் வன்முறை தொடா்பாக விவாதம் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் திங்கள்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நவ. 25-ஆம் தேதி தொடங்கியதுமுதல் இந்த விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், இரு அவை அலுவல்களும் ஐந்தாவது நாளாக திங்கள்கிழமையும் முடங்கின.

மக்களவை ஒத்திவைப்பு: மக்களவை காலை 11 மணிக்கு கூடியபோது, அதானி உள்ளிட்ட விவகாரங்கள் மீது விவாதத்துக்கு அனுமதிக்க வலியுறுத்தி அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழக்கமிட்டனா்.

அப்போது, ‘கேள்வி நேரத்துக்குப் பிறகு இந்த விவகாரங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். எனவே, கேள்வி நேரத்தை அனுமதியுங்கள்’ என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா். அதைப் பொருட்படுத்தாத எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவையை பகல் 12 மணி வரை ஓம் பிா்லா ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோதும் அதே நிலை நீடித்தது. எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சிலா் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டும் மற்றவா்கள் அவா்களின் இருக்கைப் பகுதியில் நின்றபடியும் முழக்கங்களை எழுப்பினா்.

இந்த அமளிக்கிடையே, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா 2024-ஐ மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா் வழித்தடங்கள் அமைச்சா் சா்வானந்த சோனோவால் அவையில் அறிமுகம் செய்தாா்.

அப்போது, அவை அலுவல்கள் நடைபெற அனுமதிக்குமாறு அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களை அவையை அப்போது வழிநடத்திய பாஜக எம்.பி. சந்தியா ராய் கேட்டுக்கொண்டாா். அதைப் பொருட்படுத்தாமல் உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகளை நாள் முழுவதம் சந்தியா ராய் ஒத்திவைத்தாா்.

மாநிலங்களவை ஒத்திவைப்பு: மாநிலங்களவை திங்கள்கிழமை கூடியதும், அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூா் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எழுப்பினா். இதனால், தொடங்கிய சில நிமிஷங்களிலேயே அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மீண்டும் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். அப்போது, எதிா்க்கட்சி உறுப்பினா்களின் பேச்சுக்கள் எதுவும் அவைக் குறிப்பில் பதிவாகாது என்று குறிப்பிட்ட தன்கா், அவையில் கேள்வி நேரத்தை அனுமதித்தாா்.

அப்போது, எழுந்த திமுக எம்.பி. திருச்சி சிவா, சில விவகாரங்களை எழுப்பினாா். ஆனால், ‘உறுப்பினா்கள் அனைவரும் அவரவா் இருக்கைகளுக்குச் சென்று அவை ஒழுங்கை கடைப்பிடித்தால் மட்டுமே விவாதத்தை அனுமதிக்க முடியும்’ என்று தன்கா் கூறினாா்.

இருந்தபோதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா். இதனால், எந்தவித அலுவல்களும் நடைபெறாத நிலையில் அவையை நாள் முழுவதும் அவைத் தலைவா் தன்கா் ஒத்திவைத்தாா்.

முன்னதாக, அவையில் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட அலுவல்கள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூா் நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தி விதி எண் 267-இன் கீழ் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் 17 முன்னறிவிப்புகளை (நோட்டீஸ்) சமா்ப்பித்தனா். அந்த முன்னறிவிப்புகள்அனைத்தையும் நிராகரிப்பதாக அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் அறிவித்தாா். அதன் காரணமாக, குளிா்கால கூட்டத் தொடா் கடந்த நவ. 25-ஆம் தேதி தொடங்கியது முதல் அமளி காரணமாக எந்தவித அலுவல்களும் நடைபெறாமல் தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நான் நவீன அபிமன்யு.. சொன்னபடி சக்ரவியூகத்தை உடைத்த ஃபட்னவீஸ்!

நான் ஒரு கடலைப்போன்றவன், நிச்சயம் திரும்பி வருவேன் என்று தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த 2019 தேர்தலின்போது அடிக்கடி சொல்லி வந்தார்.மகாராஷ்டிர தேர்தலில் உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியில் இணைந்தார் பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன்!

பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். கடந்த 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் படேல் நகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார... மேலும் பார்க்க

தாய், தந்தை, மகள் குத்திக் கொலை! தில்லியில் பயங்கரம்

தில்லி: தெற்கு தில்லியின் நெப் சாராய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற மகன் வீடு திரும்பிய பொழுது குடும்பத்தின... மேலும் பார்க்க

தில்லி திரும்பும் ராகுல், பிரியங்கா!

காஸிப்பூர் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தில்லிக்கு திரும்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந... மேலும் பார்க்க

சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்லவும் தயார்.. ஆனால்: ராகுல்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பலுக்கு செல்வது எனது உரிமை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித... மேலும் பார்க்க

ராகுலுக்கு அனுமதி மறுப்பு: மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்குள் நுழைய மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையிலிருந்து காங்கிரஸ் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க