50 ஆண்டுகளை நிறைவு செய்த வான்கடே மைதானம்!
வான்கடே கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாட முடிவு செய்துள்ளது.
மும்பை வான்கடே மைதானம் கடந்த 1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் விழா நடத்தப்பட உள்ளது.
வருகிற ஜனவரி 19 ஆம் தேதி வான்கடே மைதானத்தின் 50-வது ஆண்டு விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதையும் படிக்க: விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?
இந்த கொண்டாட்ட விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, அஜிங்கியா ரஹானே, திலீப் வெங்க்சர்க்கார், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அஜிங்க்யா நாயக் பேசியதாவது: மும்பை வான்கடே மைதானத்தின் 50-வது ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அழைக்கிறேன். இந்த கொண்டாட்டத்தின்போது, நமது லெஜண்டரி கிரிக்கெட் வீரர்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்றார்.
இதையும் படிக்க: உலகத்திலேயே ரிஷப் பந்த் ஒரு சிறந்த டிஃபென்டர்..! அஸ்வின் புகழாரம்!
மும்பை வான்கடே மைதானம் உருவாக்கப்பட்ட பிறகு முதல் போட்டியாக இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.