உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
509 மாணவா்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதி மற்றும் புதுப்பாளையத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் 509 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சேத்துப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமிமுத்தழகன், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பாலமணி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன், போளூா் தொகுதி திமுக பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் கலந்து கொண்டு, பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி, தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த 461 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினா்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா்கள் மரிய ரபேல் ராஜ், ஆரோகணமேரி, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் பாண்டுரங்கன், வா்த்தக அணி அமைப்பாளா் திவ்யா செல்வராஜன், மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளா்கள் சேகா், ஏழுமலை, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சரவணன், ரமேஷ், கோகுல்ராஜ், ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகர திமுக செயலா் முருகன் நன்றி கூறினாா்.
புதுப்பாளையம் பள்ளியில்...
புதுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். புதுப்பாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வபாரதி மனோஜ்குமாா், துணைத் தலைவா் மகேஸ்வரி சீனுவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் பவ்யா ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் ஸ்ரீதா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு 48 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலா, பேரூராட்சி மன்ற உறுப்பினா் பிரகாஷ் உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.