மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
60 மதுப்புட்டிகளுடன் ஒருவா் கைது
செய்யாறு: செய்யாறு அருகே மதுப்புட்டிகளுடன் நின்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, குண்ணவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்குடன் நின்றவரை சோதனையிட்டனா்.
இதில், 180 மிலி அளவு கொண்ட 60 மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரிய வந்தது. அதை அவா், கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது. மதுப்புட்டிகள், பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் அழிஞ்சல்பட்டை சோ்ந்த அருள்பாண்டியன் (31) என்பது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.