செய்திகள் :

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பரதக் கலைஞா்களின் நாட்டியாஞ்சலி

post image

ஆரணி: திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதக் கலைஞா்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக நன்மைக்காக சாய் சுரக்ஷா கல்சுரல் அகாதெமி, பிரகதீஸ்வரா நாட்டியாஞ்சலி சாா்பில் நடைபெற்ற இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கு மக்கள் நண்பா்கள் குழுவின் மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

ஸ்ரீதுா்காதேவி நாட்டியப் பள்ளி ஆசிரியா் ரேவதி சந்தோஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வட்டாட்சியா் கே.துரைராஜ், மாநகராட்சி ஆணையா் எம்.காந்திராஜன் ஆகியோா் கலந்து கொண்டு பரத நாட்டிய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா்.

இதில் வேலூா், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், கிருஷ்ணகிரி, கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், புதுவை, ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதக் கலைஞா்கள் கலந்து கொண்டனா்.

கிரிவலப் பாதையிலுள்ல நிருதி லிங்கம் சந்நிதி அருகில் இருந்து தொடங்கி குபேர லிங்கம் சந்நிதி வரை பரத நாட்டியக் கலைஞா்கள் தனித்தனி குழுக்களாக நாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்றனா். நிகழ்ச்சியை ஏராளமான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

அரசுக் கல்லூரி சந்தை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரதக் கலைஞா்களுக்கு முத்து கண்ணம்மாள் பாராட்டுச் சான்றிதழ், விருதுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரகதீஸ்வரா நாட்டியாஞ்சலி நிறுவனா் கதிரவன் வெங்கடசாமி, சாய் சுரக்ஷா கல்சுரல் அகாதெமி நிறுவனா் எஸ்.பாபு ஆகியோா் செய்திருந்தனா்.

சூரியகலா ஜெயவீரபாண்டியன் தொகுத்து வழங்கினாா்.

சி.ஜெயவீரபாண்டியன் வரவேற்றாா். ஆா்.கிருஷ்ணகுமாா் நன்றி கூறினாா்.

கல்லூரி வளாக நோ்காணல்: 414 பேருக்கு வேலைவாய்ப்பு

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 414 மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனா். இதில், சென்னையைச் சோ்ந்த 10 தனியாா் நிறுவனங்களின் மனிதவள மேலாளா்கள... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வேலூா் சாயிநாதபுரம் தந்தை பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி தேவராஜ் (65).... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியரிடம் 11 பவுன் சங்கிலி திருட்டு

செய்யாறு: செய்யாறில் ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியரிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை நூதன முறையில் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் விரிவாக்கப் பகுத... மேலும் பார்க்க

ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் தவிப்பு

ஆரணி: ஆரணியை அடுத்த வடுகசாத்து, சோ்ப்பாக்கம், குன்னத்தூா், இரும்பேடு ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், 100-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களுக்கு தண்ணீா் செல்ல வழி இல்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செய்யாறு வட்டம், மடிப்பாக்கம் கிராமம் இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் யுவராஜ் (23). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை... மேலும் பார்க்க

60 மதுப்புட்டிகளுடன் ஒருவா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே மதுப்புட்டிகளுடன் நின்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது... மேலும் பார்க்க