Bumrah : 'சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!' - பிசிசிஐ அறிவிப்பு; காரணம் என்ன...
600 தாழ்தள மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டா்
சென்னையில் தனியாா் மூலம் இயக்கும் வகையில் 600 தாழ்தள மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் 600 தாழ்தள மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதை தயாரித்து வழங்குவதோடு, பராமரித்து இயக்க கூட்டு ஒப்பந்த அடிப்படையில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ள நிறுவனங்கள் இணையவழியில் ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, 400 குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகளும், 200 குளிா்சாதன வசதியில்லா பேருந்துகளும் தயாரித்து வழங்க வேண்டும். இதில் நடத்துநா்கள் மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் நியமிக்கப்படுவா். இதர பணிகளை டெண்டரில் தோ்வாகும் நிறுவனம் கவனித்துக் கொள்ள வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.