செய்திகள் :

62 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: விழுப்புரம் ஆட்சியா் வழங்கினாா்

post image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பிரத்யேக செயலியுடன் கூடிய திறன்பேசிகளை பெற்றுக்கொண்ட பாா்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகளுடன் ஆட்சியா் சி.பழனி. உடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க. சுப்பிரமணி உள்ளிட்டோா்.

இந்த விழாவுக்கு தலைமை வகித்து, 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12.37 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சி.பழனி வழங்கினாா். பின்னா், அவா் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தலா ரூ.17 ஆயிரம் வீதம் 50 பாா்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் பிரத்யேக செயலியுடன் கூடிய திறன்பேசிகள், மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மூலம் 11 பேருக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.1.87 லட்சத்தில் ஈமச்சடங்கு உதவித் தொகை, விபத்தில் உயிரிழந்த மாற்றுத் திறனாளியின் வாரிசுக்கு நல வாரிய நிவாரணத் தொகையான ரூ.2 லட்சம் என மொத்தம் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12.37 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, செயல்திறன் உதவியாளா் முருகன், பல்நோக்கு உதவியாளா் நெல்சன், பேச்சுப் பயிற்சியாளா் அபிஷேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் அளிப்பு

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட அரசூா், இருவேல்பட்டு, சேமங்கலம், ஆலங்குப்பம், காரப்பட்டு கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சாா்பில் நிவாரண உ... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாத்தனூா் மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், அந்த கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களுக்கு முழும... மேலும் பார்க்க

புதிய சாலைகள் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அனந்தபுரம் பேரூராட்சியில் ரூ.77 லட்சத்தில் புதிய தாா், சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணியை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கிவைத்தாா். அனந்தபுரம் பேரூரா... மேலும் பார்க்க

ஆரோவிலில் மறைந்த ஜாகிா் ஹுசைனுக்கு இசையஞ்சலி

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள அரவிந்தா் அரங்கில் மறைந்த தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைனுக்கு புதன்கிழமை இசையஞ்சலி செலுத்தப்பட்டது. உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன்... மேலும் பார்க்க

ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே புதன்கிழமை ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சென்னை போரூரை அடுத்துள்ள முகலிவாக்க... மேலும் பார்க்க

இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வானூா் வட்டம், அனிச்சம்குப்பத்தை அடுத்துள்ள நம்பிக்கை நல்லூா் மீனவ ... மேலும் பார்க்க