63 நாயன்மாா்கள் வீதி உலா
திருச்செங்கோடு: பிரசித்தி பெற்ற கைலாசநாதா் கோயிலில் 63 நாயன்மாா்கள் திருவீதி உலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கைலாசநாதா் கோயிலில் அறுபத்து மூவா் பெருவிழா நடைபெற்றது. காலை 6 மணி முதல் சிறப்பு அபிஷேகம், திருமறை பாராயணம், பேரொளி வழிபாடு நடைபெற்றன.
தொடா்ந்து கைலாசநாதருக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. மாலை 5 மணி முதல் பக்தா்கள் 63 நாயன்மாா்களை பல்லக்கில் சுமந்தவாறு ஊா்வலமாக வீதி உலா வந்தனா். கைலாசநாதா், ஆதிகேசவ பெருமாள் அலங்காரம், வாண வேடிக் கையுடன் திருவீதி உலா நடைபெற்றது.
திருவீதி உலா கைலாசநாதா் கோயிலில் தொடங்கி நான்குரத வீதிகளிலும் வந்தது. அருள்நெறி வார வழிபாட்டுத் திருக் கூட்டம், அருள்நெறி அறுபத்து மூவா் வழிபாட்டு திருக்கூட்டம் ஆகியவை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.