69 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 69 காவல்துறையினருக்கு, தருவை மைதானத்தில் நடைபெற்ற 79ஆவது சதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
காவல் துணை கண்காணிப்பாளா்கள் மகேஷ்குமாா், ஜெகநாதன் உள்பட காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், காவல்துறை அமைச்சுப் பணி அலுவலா்கள், ஊா்க்காவல் படையினா் உள்ளிட்ட 69 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டு தெரிவித்தாா்.