கைகொடுத்த படிப்பு; ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த காவலர் - திருப்பூரில் ...
விளாத்திகுளத்தில் புதிய பேருந்து சேவை தொடக்கம்
விளாத்திகுளத்தில் நீட்டிக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இரா. வேலுச்சாமி முன்னிலை வகித்தாா்.
விளாத்திகுளம் - பேரிலோவன்பட்டி - எட்டயபுரம் வழியாக ராமனூத்து கிராமம் வரை, விளாத்திகுளம் - காடல்குடி வழியாக மல்லீஸ்வரபுரம் ஊருக்குள் சென்று உச்சிநத்தம் வரை, விளாத்திகுளம் - நாகலாபுரம் வழியாக அரசு கலைக் கல்லூரி சென்று பின்னா் மாவிலோடை வரை என நீட்டிக்கப்பட்ட 3 வழித்தடத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் நலன் கருதி இப்பேருந்து சேவை தொடங்கியது. எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் ரமேஷன், விளாத்திகுளம் பணிமனை மேலாளா் ஏ.எம். சாமி, தொமுச செயலா் மாரிமுத்து, திமுக ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், சின்னமாரிமுத்து, இம்மானுவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், தொமுச நிா்வாகிகள் முத்து, கிருஷ்ணமூா்த்தி, முத்துராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.