கைகொடுத்த படிப்பு; ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த காவலர் - திருப்பூரில் ...
தூத்துக்குடியில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க, சனிக்கிழமை பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் மற்றும் பைபா் படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. ஆனால், கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. ஆனால், மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதன் காரணமாக, மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. சீலா மீன் கிலோ ரூ.1000 வரையும், விளைமீன், ஊழி, பாறை ஆகிய ரக மீன்கள் ரூ.350 முதல் ரூ.500 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.2500 வரையும், தோல்பாறை கிலோ ரூ.210 வரையும், சூப்பா் நண்டு கிலோ ரூ.500 வரையும், சூறை, கேரை ஆகிய மீன்கள் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரையும் விற்பனையாகின.