செய்திகள் :

7 ஆயிரத்தைக் கடந்த கரோனா: ஒரேநாளில் 306 பேருக்குப் பாதிப்பு!

post image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 306 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, புதிதாக 306 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் கேரளத்தில் 3, கர்நாடகத்தில் இருவர், மகாராஷ்டிரத்தில் ஒருவர் என ஆறு பேர் தொற்று பாதித்து பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் 43 வயதுடைய ஆண் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாகவும், மற்றவர்கள் வயதானவர்கள் மற்றும் முன்னதாக சுவாச மற்றும் நாள்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன, இதற்கு LF.7, XFG, JN.1 மற்றும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட NB.1.8.1 துணை மாறுபாடு உள்ளிட்ட புதிய வகை வைரஸ்கள் காரணமாகும்.

கேரளத்தில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தரவுகளின்படி 2,223 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 170 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் புதிதாக 114 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 1,223 பதிவாகியுள்ளது. தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 66 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்தம் 757 வழக்குகளும், தமிழகத்தைப் பொருத்தவரை மொத்த பாதிப்பு 204 ஆகப் பதிவாகியுள்ளன.

சத்தீஸ்கர்: அமித் ஷா வருகைக்கு முன் 2 கிராம மக்களைக் கொன்ற நக்சல்கள்

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இரண்டு கிராம மக்களை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பமேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளுக்கு ... மேலும் பார்க்க

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா். கா்நாடக ப... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நாட்டின் குரல் இழப்பையும், மாண்புகளைக் கைவிடுதலையும் குறிக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ள... மேலும் பார்க்க