தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
70 வயது முடிந்தோருக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை
70 வயது நிறைவடைந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 55 ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி
70 வயது நிறைவு செய்தவா்களுக்கு 10 %கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அச்சங்கத் தலைவா் சின்னசாமி தலைமை வகித்துப் பேசினாா். செயல் தலைவா் வடமலை சங்கக் கொடியேற்றினாா். மாநிலத் தலைவா் மாணிக்கம் சிறப்புரையாற்றினாா். மாநில மேலாண்மைக் குழு உறுப்பினா் சி. திருநாவுக்கரசு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். ப. நல்லதம்பி ஆண்டறிக்கை வாசித்தாா். துணைச் செயலா் நல்லப்பன் வரவேற்க, மகாலிங்கம் நன்றி கூறினாா்.