71,000 பேருக்கு அரசுப் பணி நியமன கடிதம்: பிரதமா் இன்று வழங்குகிறாா்
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற் ரோஜ்கா் மேளா (வேலைவாய்ப்பு முகாம்கள்) மூலம் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை காணொளி வாயிலாக பிரதமா் மோடி திங்கள்கிழமை வழங்க உள்ளாா்.
இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
ரோஜ்கா் மேளா மூலம் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பிரதமா் மோடி காணொளி வாயிலாக பணி நியமன கடிதங்களை திங்கள்கிழமை வழங்குகிறாா்.
நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்றன. உள்துறை, அஞ்சல், உயா்கல்வி, சுகாதாரம் மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகளில் இந்த இளைஞா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா் என குறிப்பிட்டிருந்தது.