8 ஆண்டுக்கால காதல்; வேறொரு பெண்ணைக் கரம் பிடிக்க முயன்ற காதலன்... இளம்பெண் செய்த அதிர்ச்சி செயல்!
உத்தரப்பிரதேசத்தின் முஜாபர்பூரைச் சேர்ந்த பப்லு என்பவர், ஹீனா என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். ஆனால் பப்லு தனது வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹீனா தனது காதலனுக்கு தக்க தண்டனை கொடுக்க முடிவு செய்தார். இதற்காக தனது காதலனை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் தனிமையில் இருந்தனர். பின்னர் திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஹீமா தான் எடுத்துச் சென்று இருந்த கூரிய ஆயுதத்தால் தனது காதலனின் ஆணுறுப்பைவெட்டினார். இதை எதிர்த்து பப்லு போராடினார். இதில் இருவரும் காயம் அடைந்தனர். ஹோட்டல் அறையில் இருந்து சத்தம் வந்ததை கேட்ட ஹோட்டல் ஊழியர்கள், உடனே கதவை திறந்து பார்த்தபோது இருவரும் காயத்துடன் கிடந்தனர். உடனே அவர்கள் மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்தனர்.
அப்பெண் தனது காதலனின் ஆணுறுப்பை வெட்டி இருந்தார். அப்பெண்ணின் கையிலும் வெட்டுக்காயம் இருந்தது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீஸ் அதிகாரி பிந்தால் கூறுகையில், ``பெண்ணிடம் விசாரித்தபோது இருவரும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் பப்லுவிற்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்ய நிச்சயம் ஆகி இருக்கிறது. இதனால் கோபத்தில் தான் பப்லுவை தாக்கியதாக அப்பெண் தெரிவித்துள்ளார். அதோடு தன்னை தானே அப்பெண் வெட்டிக்கொள்ள முயன்றுள்ளார். அதனை அந்த வாலிபர் தடுத்துள்ளார். சம்பவம் நடந்தது ஹோட்டல் என்று பெண் கூறுகிறார். ஆனால் காரில் சம்பவம் நடந்தது என்று பப்லு கூறுகிறார். உண்மையில் எங்கு நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.