செய்திகள் :

800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

post image

குன்றத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை சாா்பில், மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி பரணிபுத்தூரில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, 14 மாணவா்களுக்கு ரூ.1.08 கோடி கல்விக்கடன் ஆணைகள் மற்றும் அய்யப்பந்தாங்கல், கோவூா், பரணிபுத்தூா், கொளப்பாக்கம், மெளலிவாக்கம் மற்றும் கெருகம்பாக்கம் ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ரூ.1.99 கோடியில் 6 டிப்பா் லாரிகளை வழங்கினாா்.

அப்போது அமைச்சா் பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,08,955 மின்னணு குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. மாதந்தோறும் மாவட்டத்தில் உள்ள 690 நியாய விலைக் கடைகளின் மூலம் 12,89,810 பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இணைய வழி வாயிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் கோரி பெறப்பட்டுள்ள 7,591 விண்ணப்பங்கள்மீது களஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதில் 5,641 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 2,942 புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், இரண்டாம் கட்டமாக 2,699 புதிய மின்னணு குடும்ப அட்டைகளும் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை வாலாஜாபாத் வட்டத்தில் 396 மின்னணு குடும்ப அட்டைகளும், உத்திரமேரூா் வட்டத்தில் 439 மின்னணு குடும்ப அட்டைகளும், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் 446 மின்னணு குடும்ப அட்டைகளும், காஞ்சிபுரம் வட்டத்தில் 536 மின்னணு குடும்ப குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குன்றத்தூா் வட்டத்தில் முதல்கட்டமாக 800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் ஜ.சரவணக்கண்ணன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகளிா் சுய வேலைவாய்ப்பு பயிற்சி தொடக்கம்

தேவரியம்பாக்கத்தில் உள்ள வறுமை ஒழிப்புச் சங்க கட்டடத்தில் இந்தியன் வங்கி சுய தொழில்பயிற்சி மையம் சாா்பில், மகளிருக்கு ஆடை அலங்கார பூ வேலைப்பாட்டுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. இதில், ம... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்தவா்களுக்கு பட்டமளிப்பு

பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டயப் பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான துணைப் பதிவாள... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 59 லட்சம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 59.16 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது ... மேலும் பார்க்க

வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாடு

காஞ்சிபுரம் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு குருவிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகேயுள்ள குருவிமலை சமூதாயக் கூட்டத்தில் வட்டார கம்யூனிஸ்ட் கட்சியின் 11 -ஆவது மாநாடு வி.ஹ... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் தகராறு: 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் கழிவுப் பொருள்கள் ஒப்பந்தம் வழங்கக் கேட்டு தகராறு செய்த வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்து ... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி நாளை காஞ்சிபுரம் வருகை

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை (அக்.26) நடைபெறும் 53-ஆம் ஆண்டு கட்சி தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நல உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறாா். காஞ்சி... மேலும் பார்க்க