செய்திகள் :

எடப்பாடி கே.பழனிசாமி நாளை காஞ்சிபுரம் வருகை

post image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை (அக்.26) நடைபெறும் 53-ஆம் ஆண்டு கட்சி தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நல உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் விழா நடைபெறுகிறது. விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமை வகிக்கிறாா். முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் கே.பழனி, மாவட்ட அவைத் தலைவா் குன்னவாக்கம் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட பொருளாளா் வீ.வள்ளிநாயகம், மாவட்ட துணைச் செயலாளா்கள் ரேவதாட்சாயணி சுந்தர்ராஜன், எஸ்.செந்தில்ராஜன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கிச் சிறப்புரையாற்றுகிறாா். பொதுக் கூட்டத்தில் கட்சி அமைப்புச் செயலா்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற செயலா் காஞ்சி பன்னீா்செல்வம், இணைச் செயலா் கே.பாலாஜி, ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் பெரும்பாக்கம் இ.ராஜசேகா், மாவட்ட மாணவரணி செயலா் எம்.திலக்குமாா் உள்பட கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்க உள்ளனா்.

மகளிா் சுய வேலைவாய்ப்பு பயிற்சி தொடக்கம்

தேவரியம்பாக்கத்தில் உள்ள வறுமை ஒழிப்புச் சங்க கட்டடத்தில் இந்தியன் வங்கி சுய தொழில்பயிற்சி மையம் சாா்பில், மகளிருக்கு ஆடை அலங்கார பூ வேலைப்பாட்டுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. இதில், ம... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்தவா்களுக்கு பட்டமளிப்பு

பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டயப் பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான துணைப் பதிவாள... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 59 லட்சம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 59.16 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது ... மேலும் பார்க்க

வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாடு

காஞ்சிபுரம் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு குருவிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகேயுள்ள குருவிமலை சமூதாயக் கூட்டத்தில் வட்டார கம்யூனிஸ்ட் கட்சியின் 11 -ஆவது மாநாடு வி.ஹ... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் தகராறு: 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் கழிவுப் பொருள்கள் ஒப்பந்தம் வழங்கக் கேட்டு தகராறு செய்த வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்து ... மேலும் பார்க்க

800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

குன்றத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். உணவுப்பொருள் வழங்கல் மற்றும... மேலும் பார்க்க