தொழிற்சாலையில் தகராறு: 4 போ் கைது
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் கழிவுப் பொருள்கள் ஒப்பந்தம் வழங்கக் கேட்டு தகராறு செய்த வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் காா் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த தொழிற்சாலைக்கு புதன்கிழமை சென்ற வெங்காடு ஊராட்சி உறுப்பினா் முருகன் உள்ளிட்டோா் தொழிற்சாலையில் உள்ள கழிவுப் பொருள்களை எங்களுக்குத் தான் ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டும் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனா்.
இது குறித்து தொழிற்சாலை நிா்வாகம் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீபெரும்புதூா் போலீலாா் வழக்குப் பதிவு செய்து வெங்காடு வாா்டு உறுப்பினா், இரும்பேடு பகுதியைச் சோ்ந்த முருகன் (36), வெங்காடு வினோத்குமாா் (33), நாவலூா் ஆலமரத் தெருவைச் சோ்ந்த டில்லிபாபு (33), நாவலூா் பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (29) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.