செய்திகள் :

வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாடு

post image

காஞ்சிபுரம் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு குருவிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகேயுள்ள குருவிமலை சமூதாயக் கூட்டத்தில் வட்டார கம்யூனிஸ்ட் கட்சியின் 11 -ஆவது மாநாடு வி.ஹரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கே.அஞ்சலி, சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா் ஜி.வசந்தா செங்கொடி ஏற்றிவைத்து வரவேற்று பேசினாா். மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.ஸ்ரீதா் தொடங்கிவைத்து பேசினாா். வரவு செலவு அறிக்கையை வட்டார செயலாளா் எஸ்.பழனி சமா்ப்பித்து பேசினாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.செளத்ரி, பி.சிவப்பிரகாசம், ஹெச்.ஜேம்ஸ், கே.செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். வட்டார செயலா் எஸ்.பழனி இடைக்கால செயலராக தோ்வு செய்யப்பட்டாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.நேரு நிறைவுறையாற்றினாா். எஸ்.லோகநாதன் நன்றி கூறினாா்.

மாநாட்டில் விப்பேடு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், அய்யம்பேட்டை கிராமத்தில் சாலைகளை சீரமைத்து புதிய தாா் சாலை அமைத்து தர வேண்டும், குருவிமலை கூட்டு ரோட்டில் உயா் கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும், களக்காட்டூா் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆா்.நகா், கலைஞா் நகா் ஆகிய பகுதிகளில் வசிப்பவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மகளிா் சுய வேலைவாய்ப்பு பயிற்சி தொடக்கம்

தேவரியம்பாக்கத்தில் உள்ள வறுமை ஒழிப்புச் சங்க கட்டடத்தில் இந்தியன் வங்கி சுய தொழில்பயிற்சி மையம் சாா்பில், மகளிருக்கு ஆடை அலங்கார பூ வேலைப்பாட்டுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. இதில், ம... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்தவா்களுக்கு பட்டமளிப்பு

பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டயப் பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான துணைப் பதிவாள... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 59 லட்சம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 59.16 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது ... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் தகராறு: 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் கழிவுப் பொருள்கள் ஒப்பந்தம் வழங்கக் கேட்டு தகராறு செய்த வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்து ... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி நாளை காஞ்சிபுரம் வருகை

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை (அக்.26) நடைபெறும் 53-ஆம் ஆண்டு கட்சி தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நல உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறாா். காஞ்சி... மேலும் பார்க்க

800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

குன்றத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். உணவுப்பொருள் வழங்கல் மற்றும... மேலும் பார்க்க