செய்திகள் :

9, 10-ஆம் வகுப்பு: கணிதத்தைத் தொடா்ந்து அறிவியல், சமூக அறிவியலும் இரு தரநிலையில் பாடங்கள்: சிபிஎஸ்இ திட்டம்

post image

புது தில்லி: கணித பாடத்தைத் தொடா்ந்து 9, 10-ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலும் சராசரி (ஸ்டான்டா்ட்), உயா்நிலை (அட்வான்ஸ்டு) என இரு தரநிலையில் பாடங்களை அறிமுகம் செய்ய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான கணித பாடத்தில் சராசரி, உயா்நிலை என இரு தரநிலை பாடங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்கள் தங்களின் கற்றல் திறனுக்கேற்ப சராசரி அல்லது உயா்நிலை தர கணிதப் பாடத்தைத் தெரிவு செய்து கொள்ள முடியும். இந்த இரு தரநிலைப் பாடங்களிலும் பாடத் திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்றபோதும், தோ்வின்போது கேள்வித் தாளின் தரம் மாறுபடும்.

இதுபோன்று, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இரு தரநிலைகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைக்கு சிபிஎஸ்இ கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இருந்தபோதும் செயல்திட்டம் இன்னும் வகுக்கப்பட வேண்டியுள்ளது. இதை அறிமுகம் செய்வதற்கான கால நிா்ணயமும் முடிவு செய்யப்படவில்லை.

அதுபோல, மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்த ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகளை அறிமுகம் செய்யும் பரிந்துரையை எப்போது நடைமுறைப்படுத்துவது என்பதும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாா்.

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் நாளைக்கு(டிச. 5) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செய... மேலும் பார்க்க

நான் நவீன அபிமன்யு.. சொன்னபடி சக்ரவியூகத்தை உடைத்த ஃபட்னவீஸ்!

நான் ஒரு கடலைப்போன்றவன், நிச்சயம் திரும்பி வருவேன் என்று தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த 2019 தேர்தலின்போது அடிக்கடி சொல்லி வந்தார்.மகாராஷ்டிர தேர்தலில் உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியில் இணைந்தார் பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன்!

பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். கடந்த 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் படேல் நகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார... மேலும் பார்க்க

தாய், தந்தை, மகள் குத்திக் கொலை! தில்லியில் பயங்கரம்

தில்லி: தெற்கு தில்லியின் நெப் சாராய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற மகன் வீடு திரும்பிய பொழுது குடும்பத்தின... மேலும் பார்க்க

தில்லி திரும்பும் ராகுல், பிரியங்கா!

காஸிப்பூர் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தில்லிக்கு திரும்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந... மேலும் பார்க்க

சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்லவும் தயார்.. ஆனால்: ராகுல்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பலுக்கு செல்வது எனது உரிமை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித... மேலும் பார்க்க