செய்திகள் :

90 Hours Job: 'ஸ்மார்ட்டாக வேலை செய்தால் போதும்!' - சு.வெ `டு' தீபிகா படுகொனே வலுக்கும் எதிர்ப்புகள்

post image

'90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்' என்ற எல் அண்ட் டி தலைவர் எஸ்.என் நாராயணன் கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அவரின் இந்தக் கருத்திற்கு பல பக்கங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதிவிட்டிருப்பதாவது, "வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார்.

தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு.

தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார்.

அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா?

சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான்.

தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா?

இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான்.

நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது" என்று கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகொனே, "பெரிய பதவிகளில் இருக்கும் நபர்கள் இந்த மாதிரியான கருத்துகளை கூறுவது அதிர்ச்சியளிக்கிறது" என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, "நாம் கடினமாகவும், ஸ்மார்டாகவும் வேலை செய்ய வேண்டும். ஆனால், அதற்காக ஆபீஸ் நேரத்தை உயர்த்தக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

90 Hours Job : `எவ்வளவு நேரம் மனைவியை பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்?' - L&T தலைவர் பேச்சால் சர்ச்சை

போன மாதம் நாராயண மூர்த்தி... இந்த மாதம் SN சுப்பிரமணியன் என கடந்த சில நாட்களாக 'வேலை நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்' என்று சில நிறுவனங்களின் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.நாராயண மூர்த்தி, '70 மணி நேரம் வ... மேலும் பார்க்க

Indian Rupee: இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள்... RBI காரணமா?!

கடந்த சில நாட்களாகவே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயில் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 'இப்படியே சென்றால், இது இந்திய பொருளாதாரத்திற்கு நல்லதல்ல' என்று கடும் எச்சரிக்கைகளை... மேலும் பார்க்க

Kharge: 'ஜி.எஸ்.டி வரி மக்களின் சேமிப்பை குறைத்துள்ளது...' - கார்கே கூறும் 7 பொருளாதார காரணிகள்!

இந்திய பொருளாதார நிலை குறித்து 7 காரணிகளைக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...`... மேலும் பார்க்க

Zoho: ``5% பேர் இப்படி இருந்தால் போதும்... பொருளாதார வளர்ச்சி கூடும்'' -ஶ்ரீதர் வேம்பு சொல்வதென்ன?

'இது என்னுடைய நாடு. ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்' என்று நினைத்து, இளைஞர்கள் பணிசெய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியிருந்தது இந்தியா முழுவதிலும் பரபரப்பை க... மேலும் பார்க்க

Rupee vs Dollar: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஏன்? - RBI எப்படி சரிசெய்யும்?

அமெரிக்க டாலருக்கு இணையான இந்தியா ரூபாயின் மதிப்பு பெரும் சரிவைச் சந்திந்துள்ளது. கடந்த புதன் கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.94 ஆக இருந்த நிலையில், நேற்று 14 காசுகள் குற... மேலும் பார்க்க